பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ அவள் கிட்ட வந்து கட்டி


இனிமையான P சுசீலா அம்மாவின் குரலில் தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடல்.

படம்: காவல்காரன் (1967)
குரல்: P சுசீலா
கவிதை:ஆலங்குடி சோமு
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
இயக்கம்: P நீலகண்டன்
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ

வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ
அதை வெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ
அதை வெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்ச சிரிப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்ச சிரிப்பாளோ
அதில் பங்கு கொள்ள தோழியரை அழைப்பாளோ

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

அன்பிருக்கும் நெஞ்சம் ஒரு ஆலயமோ - அதில்
ஆசையும் பாசமும் காவியமோ
அன்பிருக்கும் நெஞ்சம் ஒரு ஆலயமோ - அதில்
ஆசையும் பாசமும் காவியமோ

அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ
அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ
என் கண்களில் நீ தரும் தரிசனமோ

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ

பொங்கு கடல் மடிதனில் நிலவாட - அதில்
தங்கை முகம் துள்ளி துள்ளி சதிராட
பொங்கு கடல் மடிதனில் நிலவாட - அதில்
தங்கை முகம் துள்ளி துள்ளி சதிராட
அங்கம் என்ற மலரில் உயிராட
அங்கம் என்ற மலரில் உயிராட
அன்பு எங்கிருந்தபோதிலும் புகழ் பாட

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ம் ம் ம் ம் ம் ம் ம்

1 கருத்து:

கருத்துரையிடுக