பின்பற்றுபவர்கள்

திங்கள், 26 அக்டோபர், 2015

மரகத வீணை இசைக்கும் ராகம் ..Margatha veenai isaikkum raagam...

மற்றுமொரு அழகானப் பாடல். இனிமையான இசையும் இனிமையான குரல்களும் மனதை வசப்படுத்தும்.


திரைப் படம்: மரகத வீணை (1986)
இயக்கம்: கோகுல கிருஷ்ணன்
இசை: இளையராஜா
பாடும் குரல்கள்: K J யேசுதாஸ், S ஜானகி
நடிப்பு: சுரேஷ், ரேவதி


மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

இதயம் எங்கும் தேன் மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

வீசும் காற்றே நீ மெல்ல வீசு

மலரின் தேகம் தாங்காது

பேசும் கண்ணே நீ மெல்ல பேசு

ஊரார் கேட்டால் ஆகாது

இதயம் எங்கும் பன்னீரின் ஓடை

இங்கும் அங்கும் பாய்கின்றது

பருவ வயலில் ஒரு அமுத பாசனம்

இரவு விடிய ஒரு வருஷம் ஆகணும்

இருவர் கூடலாம் ஒருவர் ஆகலாம்

மதன வேதம் தினமும் ஓதலாம்

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

கூந்தல் வந்து பாய் போடும் நேரம்

கோடை தென்றல் பூ தூவும்

ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்

உள்ளம் எங்கே கண் மூடும்

கனலும் கள்ளும் ஒன்றான போது

கண்ணே பெண்மை உண்டானது

எனது விழியில் ஒரு கனவு பூத்தது

எனது இதயம் உன்னை எழுதி பார்த்தது

புதிய வானமும் புதிய பூமியும்

இணையும் கோலம் எதிரில் வந்தது

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

இதயம் எங்கும் தேன் மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக