பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா..un raathaiyai par pothaiyile...ஆச்சி அவர்களின் ஆத்ம சாந்தியடைய அவருக்கு அஞ்சலியாக....

மனோரமா அவர்களின் பல பாடல்களில் ஒன்று.
அட்சர சுத்தமாகவும், சுருதி சுத்தமாகவும், இடையிடையே பேசும் வசனத்திலும் ஒரு தெளிவு. அவருக்கு மட்டுமே உரித்தானது. பெண் சிவாஜி என சும்மாவா சொன்னார்கள்?

திரைப் படம்: பந்தாட்டம் 
இசை: சங்கர் கணேஷ்
நாதஸ்வரம் இசைத்திருப்பவர்: தேனாம்பேட்டை பழனி
பாடல்: வாலி


உன் ராதையை பார் போதையிலே கண்ணா 

நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா 

உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா 
உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா

நீ ஊரறிய மாலையிட்டா என்னா


உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

அந்த ஆயர்பாடி கண்ண 
கோபிகா ஸ்த்ரீகளை அழ வச்சான் 
இந்த ஆடுதுறை கண்ண 
சுந்தர வள்ளி நாச்சியாரை அழ வச்சிட்டானே 
 நான் அழுதாதான் உனக்கு சந்தோஷமுன்னா 
கண்ணா 
உனக்காக நான் அழுவுறேன் அழுவுறேன் 
அழுதுகிட்டே இருக்கிறேன் 
நான் மட்டுமா அழுகிறேன் 
என்னோட சேர்ந்து என் நாதஸ்வரமும் அழுவுதே 
கேக்கிறியா 
கண்ணா கச்சேரியிலே பல ராகங்கள் வாசிச்ச என்னை வாழ்கையிலே முகாரி ராகத்தை மட்டுமே வாசிக்க வச்சிட்டியே 
உன்னை எப்படி என்னாலே மறக்க முடியும் 
கண்ணா 

உன்னை மறப்பதற்கு குடிக்கணுமோ கள்ளு
உன் நினைப்பை விட போதையுண்டோ சொல்லு 


உன்னை மறப்பதற்கு குடிக்கணுமோ கள்ளு
உன் நினைப்பை விட போதையுண்டோ சொல்லு 

நான் நினைகறப்போ நேரில் வந்து நில்லு 

நான் நினைகறப்போ நேரில் வந்து நில்லு
ரொம்ப கொடுமையப்பா மன்மதனின் வில்லு 


உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

கண்ணா 
பாஞ்சாலி கத்தினப்போ புடவையோட வந்தே 
கஜேந்த்ரன் கத்தினப்போ கருடனோட வந்தே 
இந்த சுந்தர வள்ளி கத்தரப்போ தவிலோட வாயேன் 
 கண்ணா கண்ணா கண்ணா 

என்னை த‌வில‌ போல‌ நீ நென‌ச்சி நேசி
மெல்ல த‌ழுவிக்கிட்டு தாள‌த்தோட‌ வாசி 


என்னை த‌வில‌ போல‌ நீ நென‌ச்சி நேசி
மெல்ல த‌ழுவிக்கிட்டு தாள‌த்தோட‌ வாசி 

உன் இனிமைகெல்லாம் நான் தானே ராசி
உன் இனிமைகெல்லாம் நான் தானே ராசி 
என்னை துளைக்குத‌ய்யா த‌னிமையெனும் ஊசி
  

கண்ணா 
எங்கிட்டே ஒளிஞ்சி விளையாடுறியா 
நீ எங்கே போனாலும் உன்னை நான் விடமாட்டேன் 
கண்ணா 
கண்ணா 
கண்ணா 

 

உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்றேன் கண்ணா !

கண்ணா 
கண்ணா 
கண்ணா 
கண்ணா

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

மனோரமா கூட அருமையான பாடகி தான். சிறுவயதில் அழகுதான். நிறைய பாடல்கள் பாடியுள்ளார். “வா வாத்யாரே ஊட்டாண்ட”, மஞ்சக்கயிறு தாலி மஞ்சக்கயிறு”, டில்லிக்கு ராசானாலும் “ இப்படி நிறைய பாடல்கள். நடிகை, பாடகி, ஆனால் எனோ திருமண வாழ்க்கை இவருக்கு தோல்வி தான்.

கருத்துரையிடுக