பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 மார்ச், 2017

எங்கிருந்தோ ஆசைகள்.. எண்ணத்திலே ஓசைகள்...

இளமை ஊஞ்சல் ஆடும் இந்த  பாடல் இனிய இசை,  குரல், பாடலால்
அமைக்கப்பட்டுள்ளது. கேட்டு  மகிழ  நிச்சயம் இனிக்கும்.

திரைப்படம்: சந்த்ரோதயம் (1966)
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ், பி சுசீலா
நடிப்பு:  எம்.ஜி. ஆர், ஜெயலலிதா
இயக்கம்:  K ஷங்கர்Embed Music - Audio Hosting -
எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன்

எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன்

ஆசை வரும் வயது
உந்தன் வயது
பேசும் இளம் மனது
எந்தன் மனது
ஆசை வரும் வயது
உந்தன் வயது
பேசும் இளம் மனது
எந்தன் மனது

ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும்
மாதுள்ளம் நாளோரு தூதுகள் அனுப்பும்
என்னென்ன சுகம் வருமோ
தேவி

எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான்தான் உன்னை மாற்றினேன்

மாலை வரும் மயக்கம்
என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும்
இல்லை உறக்கம்

மாலை வரும் மயக்கம்
என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும்
இல்லை உறக்கம்
பூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க
நான் அதைப் பார்க்கையில் நூலென இளைக்க
என்னென்ன அதிசயமோ....

சந்தித்ததோ பார்வைகள்
தித்தித்ததோ நினைவுகள்
மையலை சொல்லத் தெரியாமலே
ஏன் ஏன் இந்தக் கேள்விகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
லாலாலாலாலாலா லா லா லா
ஒஹோ ஹோ ஹோ ஹோஹோ
ம் ம் ம் ம் ம் 

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ரசித்தேன் நண்பரே - கில்லர்ஜி

Unknown சொன்னது…

நன்றிகள் பல சார்

Musta சொன்னது…

மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
தமிழ் வயதுவந்தோர் கதை

Ranjith Ramadasan சொன்னது…

இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் https://www.techhelpertamil.xyz/
YouTube Channel: Tech Helper Tamil

கருத்துரையிடுக