பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

பாவை நீ மல்லிகை பால் நிலா புன்னகை

மிகச் சாதாரணமான பாடல் தான் ஆனாலும் இனிமையான இசையும் குரலும் பாடலை நன்றாக மெருகேற்றியுள்ளது.திரைப் படம்: தெய்வீக ராகங்கள் (1980)

இயக்கம்: A வீரப்பன்

இசை: M S விஸ்வனாதன்

பாடல்: புலமைபித்தன்

குரல்கள்: P ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
பாவை நீ மல்லிகை

பால் நிலா புன்னகை

மான்களில் ஓர் வகை

மங்கையே என்னிடம் அன்பு வைமாதமோ கார்த்திகை

மையலில் காரிகை

மன்மதன் பண்டிகை

மாலையில் காதலின் ஒத்திகைஅந்த வானோரும் காணாத எழில் மேனகை

தமிழ் தேனூறும் சொல் பேசும் அமுதாம்பிகை

அந்த வானோரும் காணாத எழில் மேனகை

தமிழ் தேனூறும் சொல் பேசும் அமுதாம்பிகை

வானிலோர் தாரகை வந்ததோ கன்னிகை

பூவுடல் மாளிகை தேவையோர் நாழிகைவிழி மை தீட்ட தேடும் கை அது தூரிகை

சுகம் மாறாமல் கூடும் கை மணவாளன் கை

விழி மை தீட்ட தேடும் கை அது தூரிகை

சுகம் மாறாமல் கூடும் கை மணவாளன் கை

பாவையோ ஓர் வகை பண்புகள் நால்வகை

அம்புகள் ஐவகை அல்லவோ என் பகைபாவை நீ மல்லிகை

பால் நிலா புன்னகை

மான்களில் ஓர் வகை

மங்கையே என்னிடம் அன்பு வைஒரு தென்பாண்டி சங்கத்து தமிழ் மூவகை

அதில் தேனூற நீ பாடும் இசை ஏழ்வகை

ஒரு தென்பாண்டி சங்கத்து தமிழ் மூவகை

அதில் தேனூற நீ பாடும் இசை ஏழ்வகை

சேல்விழி வேல்வகை சிற்றிடை நூல்வகை

தாங்கியே வந்த கை வாங்குமோ வாடகைபாவை நீ மல்லிகை

பால் நிலா புன்னகை

மான்களில் ஓர் வகை

மங்கையே என்னிடம் அன்பு வைமாதமோ கார்த்திகை

மையலில் காரிகை

மன்மதன் பண்டிகை

மாலையில் காதலின் ஒத்திகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக