பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

ஒரு நாள் இருந்தேன் தனியாக ஒரு பெண் நடந்தாள் அருகே


1967 களில் மிகப் பிரபலமான ஆங்கிலப் பாடலான இந்த பாடல் உலகின் பல வித மொழிகளில் மொழி மாற்றம் செய்து மகா வெற்றி பெற்றது. (கொலைவெறி பாடலுக்கு முன்னரே). வேதாவும் தன் பங்குக்கு மிக இனிமையாக இந்தப் பாடலை வழங்கியுள்ளார்.

திரைபடம்: எதிரிகள் ஜாக்கிரதை (1967)
பாடியவர்கள்: T M S, P சுசீலா, வசந்தா
பாடல்: கண்ணதாசன்
இசை: வேதா
நடிப்பு: ரவிசந்திரன், R S மனோகர், L. விஜயலக்ஷ்மி













ல ல லல லல ல ல லல லல
ஒரு நாள் இருந்தேன் தனியாக
ஒரு பெண் நடந்தாள் அருகே
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே

அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
சபாஷ்டா கண்ணா
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா

குலுங்கும்  வசந்தம் அவளானாள்
குவளை மலராய் மலர்ந்தாள்
தவழும் தென்றல் அவனானான்
தழுவும் மலரை மணந்தான்

அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா

பழகும் காதல் பரிசாக
பாவை கேட்டாள் உன்னை
கேட்டேன் கொடுத்தார் துணையாக
எடுத்தேன் அணைத்தேன் அன்னை

அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
லல ல ல ல லல ல ல ல

2 கருத்துகள்:

K. Sethu | கா. சேது சொன்னது…

அந்த ஆங்கில பாடலை அக்காலத்தில் எனது சிறுவயதில் அடிக்கடி கேட்டது நினைவுளது. ஆனால் பாடியது யார் மற்றும் அதன் பாடல்வரிகள் யாவும் மறந்துவிட்டேன். கண்டறிய விரும்பகிறேன். தங்களுக்கு தெரியுமா?

Rajamanoharan T E சொன்னது…

இலங்கை ஒலி பரப்புக் கதட்டு ஸ்தாபத்தின் வானொலியில் என் சிறுவயதில் அடிக்கடி மாலை வேளைகளில் கேட்டபாடல்

கருத்துரையிடுக