பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

முத்தம் போதாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே


இனிமையான இளையராஜா இசையில் S P Bயும் ஜானகி அம்மாவும் அடக்கி வாசித்திருக்கும் பாடல்.

திரைப் படம்: எனக்குள் ஒருவன் (1984)
நடிப்பு: கமல், ஷோபனா
இசை: இளையராஜா
இயக்கம்: S P முத்துராமன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: S P B,S ஜானகி

Free Music - Upload Audio Files - Mutham Pothathe


முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்

போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே

இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதே
ம் ம் ம்
முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே
சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நாணமே நாணுதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக