பின்பற்றுபவர்கள்

வியாழன், 19 ஏப்ரல், 2012

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

ஒரு அழகான பாடல். அப்போதைய கால கட்டத்தில் அரசியல் அர்த்தமுள்ள பாடலும் கூட. கவிஞர் சரியாக இந்த காதல் பாடலை பயன்படுத்திக் கொண்டார் என்பார்கள்.


திரைப் படம்: பட்டணத்தில் பூதம் (1967)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: R கோவர்தனம் (நன்றி திரு நாகராஜன்)
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயாhttp://www.divshare.com/download/15140852-089
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை

பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே

நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ

காலம் மாறினால் காதலும் மாறுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ

மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன்
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆ ஆ ஆ ஆ

அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....

2 கருத்துகள்:

கருத்துரையிடுக