பின்பற்றுபவர்கள்

திங்கள், 16 ஏப்ரல், 2012

காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க...

எல்லா வகையிலும் இளமை ததும்பும் ஒரு பாடல். வசீகிக்கிறது.


திரைப் படம்: பெண்னொன்று கண்டேன் (1974)
நடிப்பு: முத்துராமன், பிரமிளா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: S P B , சுசீலா
இயக்கம்: கோபு












காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க...

காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க...

இன்னும் என்ன தட்டிக் கழிக்க இதயம் உண்டு கொட்டியளக்க...


வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது...

வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது...

ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது உறவில் இன்பம் அள்ளித் தந்தது...

காத்திருந்தேன் கட்டியணைக்க...

கன்னி இதழில் முத்து பதிக்க...

பூந்துகில் மூடிய பைங்கிளி மேணியை நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது ஏன் ஏன் ஏன்...

மாதுளம் என்பது மாங்கனி போன்றது காதலன் கைப் பட பொங்கி வழிந்தது தேன் தேன் தேன்...

தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என்று நான் துடித்தேன் இந்த வேளையிலே...

நான் தரவோ இல்லை நீ தரவோ என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே

காத்திருந்தேன் கட்டியணைக்க...

கன்னி இதழில் முத்து பதிக்க...

மானிடை ஊறிடும் திராச்சையை போல் இரு சேல் இடை பார்த்ததும் காதல் பிறந்ததோ சொல் சொல் சொல்...

பாதரசம் என ஓடிடும் பார்வையில் காதல் ரசம் தரும் கன்னி என் அருகே நில் நில் நில்...

ஆத்திரமோ இல்லை அவசரமோ எனை அணைத்திடவே இந்த நாடகமோ...

நீ அறிவாய் அதை நான் அறிவேன் இதில் கேள்விகள் நூறு கேட்கனுமோ...

காத்திருந்தேன் கட்டியணைக்க

கன்னி இதழில் முத்து பதிக்க...

இன்னும் என்ன தட்டிக் கழிக்க

இதயம் உண்டு கொட்டியளக்க...

காத்திருந்தேன் கட்டியணைக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக