பின்பற்றுபவர்கள்

சனி, 14 ஏப்ரல், 2012

முன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம்

வழக்கமான இனிமைக் குரல்கள் படு குசும்பான கவிதை வரிகளை அழகான இசையில் பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: எங்களுக்கும் காதல் வரும் (1975)
நடிப்பு: ரவிசந்திரன், காஞ்சனா
இயக்கம்: விட்டல்
இசை: விஜய பாஸ்கர் அல்லது சங்கர் கணேஷ்



முன்னிரவு நேரம்
உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா ஹா ஹா

இன்னொருவன் காண
என் பொன்னுடலும் நான
நான் பின்னிரவில் மெல்ல வரவா ஹா ஹா

முன்னிரவு நேரம்
உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா ஹா ஹா

இன்னொருவன் காண
என் பொன்னுடலும் நான
நான் பின்னிரவில் மெல்ல வரவா ஹா ஹா

காதல் பொல்லாதது

காவல் இல்லாதது

காதல் பொல்லாதது

காவல் இல்லாதது

பருவம் தூங்கிடும் பூங்கொடியில்
பறிக்க ஏங்கிடும் மாங்கனிகள்

ஒருவன் பார்க்கலாம் மறைந்திருந்து
உனக்குத் தான் இந்த தனி விருந்து

இருவர் ஒருவராய் இணைந்திருந்து

இரவெல்லாம் தழுவலாம்

இதழ்களால் எழுதலாம்

முன்னிரவு நேரம்
உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா ஹா ஹா

இன்னொருவன் காண
என் பொன்னுடலும் நான
நான் பின்னிரவில் மெல்ல வரவா ஹா ஹா

ஊரில் ஒசைகள் அடங்கையிலே
உறவின் ஆசைகள் தொடங்கையிலே

கூந்தல் தொடங்கி கால் வரையும்
இளமை படிக்கும் நூல் நிலையம்

நீயும் நானும் என்றிருக்க

விவரமாய் படிக்கலாம்

விடிந்தபின் முடிக்கலாம்

முன்னிரவு நேரம்
உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா ஹா ஹா

இன்னொருவன் காண
என் பொன்னுடலும் நான
நான் பின்னிரவில் மெல்ல வரவா ஹா ஹா

காதல் பொல்லாதது

காவல் இல்லாதது

காதல் பொல்லாதது

காவல் இல்லாதது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக