வெங்கலக் குரல் என ஒலிக்கும் இந்த இரண்டு பேருமே பாடலின் சிறப்புக்கு கவிஞருடனும் இசையமைப்பாளருடனும் இணைந்து வெற்றிக்கண்டுள்ளார்கள். அழகான பேச்சுத் தமிழிலில் ஆசை மனதை தாய் தந்தையர் பாடுவதாக அமைந்த மிக அருமையான பாடல்.
திரைப்படம்: பிள்ளைக்கனியமுது (1958)
பாடியவர்: P சுசீலா, சீர்காழி S கோவிந்தராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: P சுசீலா, சீர்காழி S கோவிந்தராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
இசை: கே.வி. மஹாதேவன்
நடிப்பு: S S ராஜேந்திரன், E V சரோஜா
இயக்கம்: M A திருமுகம்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து
இன்பம் அடைந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒன்று பிறந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒன்று பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து
இன்பம் அடைந்திட வேணும்
செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்
நாம் செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட
வேணும்
செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்
செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்
நாம் செவியாற அதைக் கேட்டு
மகிழ்ந்திட வேணும்
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கலந்துணவாய் நாம் அதற்கு ஊட்டிட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட
வேணும்
தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்

உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
நம் கனவும் நினைவாகி நலம் தர வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட
வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட
வேணும்
1 கருத்து:
நல்ல பாடல் சார் ! பகிர்வுக்கு நன்றி !
கருத்துரையிடுக