பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 22 ஜூலை, 2012

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ

சங்கர் கணேஷ் இசையமைப்பில்  ஒரு சில அருமையானப் பாடல்களில் இதுவும் ஒன்று. பாடியவர்களே இந்தப் பாடலின் வெற்றிக்கு முக்கியமானவர்கள். தங்கள் அனுபவங்களை நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

திரைப் படம்: நட்சத்திரம் (1980)
பாடியவர்கள்: P சுசீலா, S P B
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: கமல் ஹாசன், ஸ்ரீபிரியா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: தசரி நாராயண ராவ்


http://www.mediafire.com/?qh7vd99pp4apsy44tp4pmduppsfs7ml

http://www.mediafire.com/?pxnmd7umypn6ksg


பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது கண்ணா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது கண்ணா

ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே

காதலிக்கு வீடு கட்டி கண்ணாலே மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா

சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா

காதலிக்கு வீடு கட்டி கண்ணாலே மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா

சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா

கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும்
என்னோட நீ வந்தா நல்லாருக்கும்
கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும்
என்னோட நீ வந்தா நல்லாருக்கும்

வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேல நான்
வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேல நான்

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா

ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே

ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அத்த விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்
ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அத விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்

எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு
எழுதாமே சேராது தாலிகட்டு
எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு
எழுதாமே சேராது தாலிகட்டு

அட நல்லா சொன்னே சாமி மனச விட்டு
அட நல்லா சொன்னே சாமி மனச விட்டு

அட ட ட
பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
ஹா ஹா ஹா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா

ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
லலலல லலலலல லலல லலலல

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதுவரை இந்த பாடலை கேட்டதாக ஞாபகம் இல்லை சார் ! பகிர்வுக்கு நன்றி.

Covai Ravee சொன்னது…

அமர்க்களமான பாடல் சார் இது. பகிரிவிற்க்கு நன்றி. அப்படியே உங்கள் தளத்தில் இந்த படத்தில் வந்த பிரபல பாடல் சிவரஞ்சனி பாடலும் அலங்கரிகட்டும் இந்த பாடலை கேட்டுதான் நான் பாலுஜி குரலுக்கு அடிமையானேன் என்றால் மிகையாகாது.

கருத்துரையிடுக