பின்பற்றுபவர்கள்

புதன், 4 ஜூலை, 2012

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்


மீண்டும் வருகிறார் நமது T ராஜேந்தர். இப்போதும் ஒரு இனிய தமிழிலில் மனதை மயக்கும் இசையில் வளமையான குரல் கொண்ட ஒரு பாடலுடன்.

திரைப் படம்: ரயில் பயணங்களில் (1981)
இயக்கம், பாடல், இசை: T ராஜேந்தர்
பாடியவர்: P ஜெயசந்திரன்
நடிப்பு: ஸ்ரீ நாத்,  ஜோதி
http://www.divshare.com/download/18549245-52f

ல ல ல ல ல ல ல
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
ல ல ல ல ல ல ல ல லலா

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழினமோ
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழினமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேககுழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
ல ல ல ல ல ல ல ல லலா

மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா
மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா அம்மம்மா
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூந்தலை இடைவரை கண்டவளே
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூந்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தை போலே தேகத்தை ஆக்கி குழல்கட்டே  ஜாலம்
பாவை சூடும் ஆடை கூட பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி இதழ்கள் ஊறுமடி
இதழ் கள் ஊறுமடி

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்