பின்பற்றுபவர்கள்

சனி, 28 ஜூலை, 2012

அழகெனும் ஒவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே


இரு குரல்களும் போட்டியில் பாடி இருப்பது போல ஒரு தோற்றம். இந்தப் பாடலைப் பொருத்தவரை சுசீலா அம்மா முந்திக் கொள்கிறார். என்ன குரலினிமை? என்னவொரு நெளிவு சுளிவு பாடலில். இசையும் பாடல் வரிகளும் அற்புதம். புரட்சித் தலைவரின் படங்களில் பாடலுக்கும் இசைக்கும்  முக்கியத்துவம் கொடுப்பார். அதே போல இதிலும் எந்தக் குறையும் இல்லை.

ஹம்ஷகல் என்ற ஹிந்தி படத்தின் தழுவல் இது. அதில் ராஜேஷ் கன்னா நடித்திருப்பார்.

சமீபத்தில் பில்லா 2 பார்க்க நேர்ந்தது. கதையும் இல்லை இசையும் உருப்படி இல்லை. பாடல்களும் எல்லாம் மேல் நாட்டு இசையின் காப்பி. சொந்தமாக எதையும் யோசிக்கும் தன்மையை இழந்து போனான் தமிழன்.

யுவன் ஷங்கர் ராஜா புரட்சி தலைவர் காலத்தில் இருந்திருந்தால் திரைப் படத் துறையை விட்டே ஓடிப் போயிருப்பார்.
தமிழ் பட உலகின் மூத்த நடிகர் என்ற முறையில் அஜித் போன்றவர்கள் இது போன்ற உப்பு சப்பில்லாத படங்களை ஒப்புக் கொள்ளாமல் கதையும் இசையும் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டால் தமிழ் பட உலகம் கொஞ்ச நாள் உயிர் வாழ வாய்ப்புள்ளது.

பில்லா 2 போன்ற படங்களும் கமர்ஷியல் வெற்றி பெறவில்லை. 2/3 நாட்களில் சவப் பெட்டியில் அடக்கமானது. தவறான பல கருத்துக்களை அஜித் என்னும் ஒரு பெரிய நடிகரின் வாயால் (இவர்கள் எல்லோருமே அடிப்படையில் முட்டாள்கள்) சொல்ல வைத்து, இருக்கும் ஒரு சில புத்திசாலி தமிழனையும் முட்டாளாக்கும் முயற்சியில் தோற்று போனார்கள்.
நேற்று நான் கடவுள் தொலைக் காட்சியில் பார்த்தேன். அதுவும் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை எனக் கேள்விபட்டேன். ஒரு நல்ல படம் எடுத்தோம் என்ற நிறைவை இயக்குனருக்கும், ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தியை ரசிகனுக்கும் வழங்கியது.
காப்பி அடிக்க பல ஆங்கிலப் படங்களை பார்த்து சொதப்பும் நமது கமர்ஷியல் பட இயக்குனர்கள், படம் எப்படி எடுப்பது என்பதை தெரிந்துக் கொள்ள இந்த மாதிரி திரைப் படங்களையும் கொஞ்சம் பார்த்தால் அவர்களுக்கும் நன்மை, நமக்கும் கொண்டாட்டம்.

திரைப்படம்: ஊருக்கு உழைப்பவன் (1976)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: புலமைபித்தன் (முத்துலிங்கம் என்பது என் யூகம்.)
பாடியவர்கள்: K J யேசுதாஸ், P சுசீலா
நடிப்பு: எம் ஜி யார்,  வாணிஸ்ரீ , வெண்ணிற ஆடை நிர்மலா
இயக்கம்: M.கிருஷ்ணன்

http://youtu.be/aYqD50mDPQQ



அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே

இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே

காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில்
கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிந்தும் குறு நகையில்
நான் மூன்றாம் தமிழை பார்க்கின்றேன் கண்ணே உந்தன் இடையசைவில்

அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே

என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே
நீ எந்தன் தலைவன் என்றென்னும் எண்ணம் இனித்திடுமே
நீ எந்தன் தலைவன் என்றென்னும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை

இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே

ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்

நான் ஆடத் துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்

நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்

நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்

அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே

இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// யுவன் ஷங்கர் ராஜா புரட்சி தலைவர் காலத்தில் இருந்திருந்தால்,
திரைப் படத் துறையை விட்டே ஓடிப் போயிருப்பார். ///

அவர் மட்டுமல்ல... ? நிறைய பேர்கள் உள்ளார்கள்...

இப்போது வரும் "பல" பாடல்கள்... (ஒரு பார்வை)

1) இசைகேற்ற பாடல்கள்... (இனிமையான இசை ?)

2) பாடல்வரிகளுக்கேற்ற இசை... (நல்ல வரிகள் ?)

இதெல்லாம் விட
3) பணத்திற்கேற்ற பாட்டும், இசையும், etc., etc., (இது தான் உண்மை)

ஊருக்கு உழைப்பவன் படத்தின் இனிமையான பாடலை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி சார்...

பெயரில்லா சொன்னது…

ரொம்ப சரியா சொன்னீங்க சார். எனக்கும் பிடித்த பாடல்.

கருத்துரையிடுக