பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 ஜூலை, 2012

கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை


இந்த திரைப் படம் வெளிவரவில்லை என நினைக்கிறேன். இசையமைப்பாளரும் புதுசு. பாடலும் அரிதானது.

திரைப் படம்: பொம்பள மனசு (1980)
இசை: ரத்னா சூரியன்
குரல்: P ஜெயசந்திரன்
Upload Music - Audio Hosting - Kadal Alai kaalgalaiகடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள் இந்த கன்னி அலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள் இந்த கன்னி அலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

காதலென்னும் ஒரு ஆல விதை
கருகியே போவது நியாயமில்லை
காதலென்னும் ஒரு ஆல விதை
கருகியே போவது நியாயமில்லை
ஏங்கியே கேட்கிறேன் கோடி முறை
ஏங்கியே கேட்கிறேன் கோடி முறை
ஏனடி நமக்குள்ளே வெட்க திரை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

உள்ளத்தில் நினைக்கையில் இனிப்பு தந்து
உதட்டினில் மட்டும் ஏன் உப்பு தந்தாய்
உள்ளத்தில் நினைக்கையில் இனிப்பு தந்து
உதட்டினில் மட்டும் ஏன் உப்பு தந்தாய்
தித்திக்கும் தேன் தமிழ் புதுக் கவிதை
தித்திக்கும் தேன் தமிழ் புதுக் கவிதை
நீயே சொல்லடி ஓர் பதிலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

கன்னத்தில் நான் இட்ட முத்தங்களை
கை கொண்டு நீயோ துடைத்து விட்டாய்
கன்னத்தில் நான் இட்ட முத்தங்களை
கை கொண்டு நீயோ துடைத்து விட்டாய்
உன் எண்ணத்தில் நான் இட்ட முத்தங்களை
உன் எண்ணத்தில் நான் இட்ட முத்தங்களை
எது கொண்டு நீயும் துடைத்திடுவாய்

கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள் இந்த கன்னி அலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக