பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 ஜூலை, 2012

தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது...

பாடல் தரம் சற்று குறைவுதான். L R ஈஸ்வரி அவர்களின் குரல் சில பாடல்களில் மட்டும் மென்மையை பூசிகொண்டு  கேட்க அருமையாக இருக்கும் அந்த வகையில் இந்த பாடலும் ஒன்று.


திரைப்படம்: ரத்தத் திலகம் (1963)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
இயக்கம்: தாதா மிராஸி
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி


Embed Music Files - Free Audio -தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது
ம் ம் ம்
தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது

அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய் கனிகிறது
அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய் கனிகிறது

பாடல் சுவையே பனி வாய் மலரே
பயம் ஏன் வருகிறது
பாடல் சுவையே பனி வாய் மலரே
பயம் ஏன் வருகிறது

இளம் பருவத்தின் ஆசை உருவத்தில்
ஏறி பயம் போல் தெரிகிறது
இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி பயம் போல் தெரிகிறது

ஏலங்குழலால் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது
ஏலங்குழலால் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது

அது நாளும் பழகும் நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது
அது நாளும் பழகும் நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது

பூரண நிலவின் தோரணம்
ஏனொ புன்னகை புரிகிறது

அதில் காரணம் பாதி காரியம் பாதி
பதிலாய் வருகிறது

அதில் காரணம் பாதி காரியம் பாதி
பதிலாய் வருகிறது

இளமை திரண்டு தனிமை நிறைந்து
இதயம் மலர்கிறது

அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே உறவும் புரிகிறது

தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது

அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய் கனிகிறது