பின்பற்றுபவர்கள்

புதன், 17 ஆகஸ்ட், 2011

கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே

கர்னாடக இசை அடிப்படையில் அமைந்த அருமையான பாடல் மற்றும் குரல்கள்.

திரைப் படம்: மழலைப் பட்டாளம் (1980)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: லக்ஷ்மி
நடிப்பு: விஷ்ணுவர்த்தன், சுமித்திரா

கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே

கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே

பருவங்கள் சென்றாலும் கண்ணன்
அவன் கவி ராஜ சங்கீத மன்னன்
அவன் கவி ராஜ சங்கீத மன்னன்

என் பேரில் சுகமான ராகம்
ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம்
என் பேரில் சுகமான ராகம்
ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம்
நீ மழை நாளில் விளையாடும் மோகம்
என்ன வயதென்று தோன்றாத வேகம்
கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு காரிகை வடிவத்திலே
பருவங்கள் சென்றாலும் ராதை
அவள் கவிராஜ சங்கீத மேதை

வாராத செல்வங்கள் தாய்மை
அவை ஆனாலும் என் உள்ளம் ஊமை
கண்முன்பு அழகான ஆண்மை
நான் கல்லல்ல கனிவான பெண்மை
பண்பாடு என்பார்கள் சிலரே
இதில் பெண்பாடு கண்டோர்கள் எவரே
என் பாடு நான்தானே அறிவேன்
உயர் அன்போடு மனம்போல இணைவேன்
கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே

மலை மீது அடித்தாலும் காற்று
அது கடல் மீது தவழ்ந்தாலும் காற்று
வயதோடு வந்தாலும் காதல்
அது வயதாகி வந்தாலும் காதல்
உலகத்தில் சில நூறு எழுத்து
ஆனால் உறவுக்கு பல கோடி கருத்து
உன் வாழ்வை நீயாக நடத்து
இதில் ஊரென்ன சொன்னாலும் திருத்து

கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே

கௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு காரிகை வடிவத்திலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக