பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சின்னஞ்சிறு கண் மலர் செம்பவழ வாய் மலர்

இதோ மற்றொரு தாலாட்டு பாட்டு. மற்றெல்லாப் பாட்டிலும் வித்தியாசமாக நாட்டின் பொருளாதாரத்தையும் குழந்தைக்கு ஊட்டுகிறார். அதே சுவை மாறாமல் இசையமைத்து பாடலை பாடி இருக்கிறார்கள். பாடலின் ஆரம்பம் முதல் முடிவு வரை இனிமை, இனிமை இனிமைதான்.

திரைப் படம்: பதி பக்தி (1958)
நடிப்பு: சிவாஜி, ஜெமினி, அஞ்சலி தேவி, சாவித்திரி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
இயக்கம்: பீம் சிங்க்









ம் ம் ம் ம் ம் ம் ம்

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவழ வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ
ஆரிரோ..ஆராரோ

பாப்பா உன் அப்பாவை பார்க்காத ஏக்கமோ
பாய்ந்தே மடி தனில் சாய்ந்தால் தான் தூக்கமோ
தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
தாமரை கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
குப்பை தனில் வாழும் குண்டு மணிச் சரமே
குங்குமச் சிமிழே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ
ஆரிரோ..ஆராரோ

ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ
எதிர் கால வாழ்வில் கவனம் கொண்டாயோ
நாளை உலகம் நல்லோரின் கையில்
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்
மாடி மனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ
ஆரிரோ..ஆராரோ

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவழ வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ
ஆரிரோ..ஆராரோ
ஆரிரோ..ஆராரோ
ஆரிரோ..ஆராரோ
ஆரிரோ..ஆராரோ


1 கருத்து:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இது தமிழ்; இது பாடல், இது இசை, இது இன்குரல்... இன்றைய இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள்...இப்படியான பாடல்களைக் கேட்டபின்பா? ..இன்றைய இரைச்சல்களைப்
பாடல்கள் என்கிறார்கள்.

கருத்துரையிடுக