பின்பற்றுபவர்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே

என்னமாய் ஒரு தாலாட்டு? பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. குழந்தை விளையாடவும், சாப்பிடவும் தூங்கவும் ஒரே பாடலில் கவிதை படைத்திருக்கிறார் கவிஞர். அருமையான குரல் தேர்வு மற்றும் இசையமைப்பு. கண்ணொளியுடன்

திரைப் படம்: பாவை விளக்கு (1960)
கதை: அகிலன்
இயக்கம்: சோமு
நடிப்பு: சிவாஜி, சௌகார் ஜானகி
குரல்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

 நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

தேன் மணக்கும் வாய் இதழோ சிவப்பு மத்தாப்பு
சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பு
தேன் மணக்கும் வாய் இதழோ சிவப்பு மத்தாப்பு
சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பு
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
அதைக் காணும் போது மனசுக்குள்ளே எத்தனைக் களிப்பு
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

கையசைத்துக் காலசைத்துக் கண் சிமிட்டும் கனியே
கண்ணுறங்காய் நீ சிறிது ஓடுகுள்ளே தனியே
வையகத்தில் சிறகடித்து பறக்க போகும் கிளியே
வையகத்தில் சிறகடித்து பறக்க போகும் கிளியே
வடிவழகே குலம் தழைக்க வந்துதித்த கொடியே
வடிவழகே குலம் தழைக்க வந்துதித்த கொடியே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத

எட்டி எட்டி வட்ட நிலா உன்னை பார்க்குதே
உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்கு கேக்குது
எட்டி எட்டி வச்ச நிலா உன்னை பார்க்குதே
உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்கு கேக்குது
சட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
சட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
அந்த சந்திரனை விளையாடக் கூப்பிடு அம்மா
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத

1 கருத்து:

Dr.V.K.Kanniappan சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்! எம்.என்.ராஜம் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்;

கருத்துரையிடுக