பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி

அருமையான இசையில் அமைதியான, அழகான, மென்மையான ஒரு பாடல்.


திரைப் படம்: கல்யாண ஊர்வலம் (1970)
இசை: M G ராமகிருஷ்ணன்/ பார்த்தசாரதி அய்யங்கார்
குரல்கள்: K J யேசுதாஸ், S ஜானகி
பாடல்: வாலி
நடிப்பு: நாகேஷ், ஸ்ரீகாந்த், K R விஜயா
இயக்கம்: K S சேது மாதவன்
http://www.divshare.com/download/15510771-a4d







கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்துவர
கல்யாண ஊர்வலமோ...கல்யாண ஊர்வலமோ..

மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகை செண்டு கொஞ்சும்
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகை செண்டு கொஞ்சும்

காதலி உள்ளம் வெள்ளம் அதில் காதலின் ஓடம் செல்லும்
இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்துவர
கல்யாண ஊர்வலமோ...கல்யாண ஊர்வலமோ..

நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதை தன்னுடனே எடுத்து செல்வாள் அந்த அன்பு மகள்
புது மணையில் புகுந்து மணவரையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ..கல்யாண நாள் வருமோ..


ஆயிரம் காலத்தை கடந்து விழி நீரினை கண்கள் மறந்து
ஆயிரம் காலத்தை கடந்து விழி நீரினை கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
இளம் பருவ மழையில் இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ..கல்யாண ஊர்வலமோ....

2 கருத்துகள்:

தமிழன்பன் சொன்னது…

கல்யாண ஊர்வலம் திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான,
முதல் என்பது தொடக்கம்... முடிவென்பது அடக்கம்...
என்னும் பாடலை தரவேற்ற முடியுமா???

Unknown சொன்னது…

முதல் என்பது தொடக்கம்... முடிவென்பது அடக்கம்... இது பூவும் பொட்டும் என்ற படத்தில் இடம் பெற்றது விரைவில் தரமேற்ற முயற்சிக்கிறேன்.

கருத்துரையிடுக