பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 ஜனவரி, 2012

சந்தனத்தில் நிறமெடுத்து செண்பகத்தில் மணம் குங்குமத்தில் பொதிந்த உடல் எடுத்து


இன்று ஒரு இனிமையான பழைய S ஜானகியின் குரலில் ஒரு பாடல். எனக்கென்னவோ சமீபத்திய S ஜானகி அவர்களின் குரலைவிட அவரது ஆரம்பகாலக் குரலே ரொம்பவும் பிடிக்கிறது. ஆனால் இந்த பாடல் எத்தனை பேருக்கு பிடித்திருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் சந்தேகமே.

திரைப் படம்: தென்றல் வீசும் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: S ஜானகி, G K வெங்கடேஷ்
நடிப்பு: கல்யாண் குமார், கிருஷ்ண குமாரி
இயக்கம்: B S ரெங்கா



ஆ ஆ ஆ ஆ ஆ  தாம சரி தாப காம சரிகம ஆ ஆ ஆ ஆ ஆ
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 
கம பா நிதப ரிகம சரி மக ரி         

வண்ணமலர் இதழ் அணைத்து 
வைத்திருக்கும் தேன் எடுத்து 
வண்ணமலர் இதழ் அணைத்து 
வைத்திருக்கும் தேன் எடுத்து 
உண்ண இன்னும் தயங்குவதேன் 
நீர் உறக்கத்தில் மயங்குவதேன் 
உண்ண இன்னும் தயங்குவதேன் 
நீர் உறக்கத்தில் மயங்குவதேன் 
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 
கம பா நிதப ரிகம சரி மக ரி         

மின்னலதில் இழை எடுத்தே 
கருமேகமதில் குழல் பதிக்க
என்னழகு கசந்திருந்தால்
இனி யார் அழகில் கரும்பிருக்கும் 
என்னழகு கசிந்திருந்தால்
இனி யார் அழகில் கரும்பிருக்கும் 
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 

கம பா நிதப ரிகம சரி மக ரி         
கண் சிவக்கும் முகம் சிவக்கும் 
கால் கட்டைவிரல் கோலமிடும் 
பொன் சுமக்க உடல் தவிக்கும்
இந்தப் பெண் இருக்கும் இடம் இனிக்கும் 
பொன் சுமக்க உடல் தவிக்கும்
இந்தப் பெண் இருக்கும் இடம் இனிக்கும் 
சந்தனத்தில் நிறமெடுத்து 
செண்பகத்தில் மணம் எடுத்து 
குங்குமத்தில் பொதிந்த உடல் 
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல் 



1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

you take it from tfm hub , where lyrics was originally posted

கருத்துரையிடுக