பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன. [ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] நாரதர் 
கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர். 

 

இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்.
மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான “அதிசய ராகம்; ஆனந்த ராக ம்; அழகிய ராகம்” என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவ ங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறி விடுகின்றது. ஒரு பாடலில் பல ராகங்களும் தொ டர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சியே ராகமாலி கை. இந்த அதிசய ராகத்தினைக் இப்போது இங்கே கேளுங்கள்.


மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், ‘எப்படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவை தானே வைத்துக்கொண்டு வருவார்’, என்று நீங்கள் வியப்பது எனக்கு புரிகின்றது. 
முதன்முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக்கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல்  நாரதர்  இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டு படும் அவஸ்தை பார்த்த ஆர்ட் டைரக்ட ர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பதுபோலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று 
கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, “நாராயண; நாராயண” என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

நன்றி: விபரம் உபயம்  vidhai2virutcham.wordpress.comதிரைப் படம்: அபூர்வ ராகங்கள் (1975)
இசை: M S விஸ்வனாதன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: K J யேஸுதாஸ்
நடிப்பு: கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா
இயக்கம்: K பாலசந்தர்
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

அதிசய ராகம் வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
மோகம்
மோகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இந்திர லோகத்து சக்கரவாகம் 
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் 
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் 
அது என் யோகம் 

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல் வரிகள்... இது போல் இனி வருமா...? - என்னும் எண்ணம் தான் வருகிறது...

சில பாடல் வரிகள் வேண்டுமென்றால் உங்கள் தளம் வந்தால் போதும்... நேரம் கிடைத்தால் (labels) கொடுத்து பதிவுகளைப் பிரிக்கலாமே...

1) பழைய அல்லது புதிய பாடல்கள் என்று (or)

2) பாடலாசிரியர் படி... (or)

3) வருடங்கள் படி... (or)

4) உங்கள் விருப்பப்படி...

தவறாயின் மன்னிக்கவும்...

மிக்க நன்றி சார்...

myspb சொன்னது…

அழகான இனிமையான பாடல் நல்ல தொரு விளக்கம். தனபால் சார் சொன்னபடி Labels கொடுக்கலாம் முக்கியமாக பாடாலாசிரியர் பெயர் கவனம் செலுத்தலாம் அதிகம் கிடைப்பதில்லை இந்த விசயத்தில் நான் அதிகம் மெனகெடுவேன். இதே உணர்வு தாஸண்ணாவின் குரலில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பாடலும் எப்போது கேட்டாலும் ஏற்படும். நன்றி.

Unknown சொன்னது…

தனபால் ஸார், இதில் என்ன யோசனை? தாராளமாக தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இதோ லேபில் இணைத்துவிட்டேன். மெதுவாக மற்ற பாடல்களையும் சேர்த்துவிடுகிறேன். நன்றி.

கோவை ரவி ஸார். பல பாடல்கள் எழுதியவர் பெயர்கள் இணையத்திலும் பிடிக்க முடியவில்லை. கிடைத்தவரை குறிப்பிட்டுவிடுகிறேன். முன்னரே சொன்னபடி நேரமில்லாமை ஒரு பெரிய இடைஞ்சல். மன்னிக்க வேண்டும். நன்றி.

கருத்துரையிடுக