பின்பற்றுபவர்கள்

சனி, 22 செப்டம்பர், 2012

தனிமையிலே..தனிமையிலே இனிமை காண முடியுமா

சில பாடல்களில் திருமதி சுசீலா அம்மா குரலில் தேனொழுகும். அந்தவகையில் இது ஒன்று. இசையின் இனிமையோடு போட்டி போட்டுக் கொண்டு பாடும் குரல்கள். இணைந்து வரும் சோகப் பாடலும் ஒரு இனிமைதான்.


திரைப் படம்: ஆடிப் பெருக்கு (1962)
இசை:  A M ராஜா
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
இயக்கம்: K சங்கர்
பாடல்: கண்ணதாசன்
தனிமையிலே தனிமையிலே

இனிமை காண முடியுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா

தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா

தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
இந்த அவணியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்

தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

2 கருத்துகள்:

கே. பி. ஜனா... சொன்னது…

ஏ.எம். ராஜா இசையில் மிளிரும் இந்தப் பாடல் இடம் பெற்ற 'ஆடிப்பெருக்கி'ல் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய 'புரியாது...புரியாது...' பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? தவிர 'கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்...' பாடலும் பிரமாதமாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல்... நன்றி...

கருத்துரையிடுக