பின்பற்றுபவர்கள்

வியாழன், 6 செப்டம்பர், 2012

மலரே பேசு மௌன மொழி மனம் தான் ஒடும் ஆசை வழி


இந்தப் பாடல் தமிழில் சித்ரா அவர்களின் முதல் பாடல் என்பதாக பதிவாகி உள்ளது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி தமிழிலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். எனக்கு பல பெண் பாடகிகளின் குரல்கள் பிடித்தாலும், சுசீலா அம்மாவுக்கு பின் இவர் அவரது இடத்தை நிறைத்ததாகவே உணர்கிறேன்.

திரைபடம்: கீதாஞ்சலி (1985)
நடிப்பு: முரளி, நளினி
இயக்கம்: R சுந்தரராஜன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
குரல்கள்: இளையராஜா, K S சித்ராஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாட வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே

வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க

நான் ஒரு பூவோ நீ பறிக்க
நால் வகை குணமும் நான் மறக்க

மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே

மடி மேல் கொடி போல் விழுந்தேனே

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாட வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே


ஏந்திய வீணை நான் இருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க
ராத்திரி நேர ராகம் இது
பூவொடு காற்று பாடுவது
இதழால் இனிமேல் நீ எழுதும்
கதை தான் படிப்பேன் நாள் முழுதும்
படித்தால் எனக்கும் இனிக்காதோ

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல் சார்...

நடிகர் முரளியை நினைத்தால்... மனது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்...

ஸ்ரீஸ்ரீ சொன்னது…

சித்ரா வின் முதல் பாடல் "பூஜைக்கெத்த பூவிது நேத்து தாளம் போட்டது" #நீதான அந்த குயில் படத்தில்

கருத்துரையிடுக