பின்பற்றுபவர்கள்

சனி, 8 செப்டம்பர், 2012

மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்


என்னதான் இன்றைய தலைமுறைக்கு சிவாஜியின் நடிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றாலும், அவர்,  நடிப்பில் சக்கரவர்த்தி என்பதை நிரூபிக்க இது போன்ற பல பாடல்கள் உள்ளன. இன்றைய கதா நாயகர்கள் பலர் திரை கதையில் அழுதால் நமக்கு சிரிப்புதான் வருகிறது.
இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் ஒரு நல்முத்து.

திரைப் படம்: ராஜபார்ட் ரங்கதுரை 1973
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: P சுசீலா, T M S
நடிப்பு: சிவாஜி, உஷா நந்தினீ
இயக்கம்: P  மாதவன்http://www.divshare.com/download/19483163-a4e

மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்

அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம்
அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம்
வாசலில் தோரணம் உன்னை வரச்சொல்லும் தோழிகளாம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே

ஆஹா ஆஹா ஹேஹே ஓஹோ ஓஹோ
மோகம் முன்னாக ராகம் பின்னாக
முழங்கும் சங்கீதக் குயில்கள்
மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல்
மழையில் நனைகின்ற கிளிகள்
தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும்
தழுவும் சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல்
விரும்பும் ஆனந்த ரகங்கள்
தலை
இடை
கடை
என
தினம்
வரும்
சுகம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே

ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ

பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி
பதிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பொன் மான் இப்போது அம்மான் உன் கையில்
பெண்மான் என்னோடு பழகு
கண் வாய் மெய்யோடு கனிவாய் கொண்டாடி
முடிந்தால் நீராட விலகு
புது
மது
இது
இதன்
ரசம்
தரும்
சுகம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல் சார்... TMS அவர்கள் ஒரு மயக்கமாகவே பாடுவது போல் இருக்கும்...

myspb சொன்னது…

இந்த பாடலின் ஒலிபதிவு சூப்பரா இருக்கும் சார்.

கருத்துரையிடுக