பின்பற்றுபவர்கள்

வியாழன், 10 ஜனவரி, 2013

ஆசைக்கு பிள்ளையென்று ஆண்டவனைக் கேட்டதுண்டு


P சுசீலா அம்மாவின் குரலில் ஒரு குழந்தையை தாலாட்டி, நடக்க வைத்து, பின்னர் அந்தக் குழந்தையும் பட்டம் விட்டு விளையாடும் வரை ஒரே பாடலில் கதையை வடித்துவிட்டார்கள். கொஞ்சம் இந்த பாடலின் சாயல் சிவகாமியின் செல்வன் படப் பாடலான என் ராஜாவின் ரோஜா முகம் என்ற பாடலில் தெரியும். இரண்டுமே அழகானப் பாடல்கள்தான். இந்தப் பாடலின் இறுதியில் குழந்தைக்காகப் பாடும் குரல் யார் என்பது தெரியவில்லை.
பாடலின் கவிதை வரிகள் கண்ணதாசனை பிரதிபலிக்கின்றது. எழுதியது யாரென்று தெரியவில்லை.
இது ஒரு அபூர்வமான பாடல். பாடலின் இறுதி வரிகள் கிடைக்கவில்லை

திரைப் படம்: விளையாட்டு பிள்ளை (1970)
பாடல்: கண்ணதாசன் ???
இசை: கே வி மகாதேவன்
இயக்கம்:A P நாகராஜன்
நடிப்பு: சிவாஜி, பத்மினி, காஞ்சனா

http://asoktamil.opendrive.com/files/Nl81MDYwODYxXzJiMWl4X2QxNDc/aasaikku%20pillai-vilaiyaattu%20pillai.mp3
ஆசைக்கு பிள்ளையென்று
ஆண்டவனைக் கேட்டதுண்டு
பிள்ளை வந்த நேரத்திலே
தாலேலோ
உன்னை பெற்ற மனம் வாடுதடா
தாலேலோ

ஆசைக்கு பிள்ளையென்று
ஆண்டவனைக் கேட்டதுண்டு
பிள்ளை வந்த நேரத்திலே
தாலேலோ
உன்னை பெற்ற மனம் வாடுதடா
தாலேலோ

நீ பிறந்த நேரமென்பார்
இந்த நிலை வந்ததென்பார்
நான் பிறந்த நேரமடா
தாலேலோ
அதில் வீண் பழியை நீ சுமந்தாய்
தாலேலோ

நாளை பொழுது வரும்
நல்லவர்க்கு வாழ்வு வரும்
ஏழை அழுதக் கண்ணீர்
தாலேலோ
அந்த ஈசனுக்கு புரியுமடா
தாலேலோ

முத்துத் தமிழ் பாடு
சிட்டு நடைப் போடு
தத்தி தத்தி விளையாடு
நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு

தந்தையிடம் நேசமா
அன்னையிடம் ஆசையா
எவரிடம் பாசமென்றால்
கைகள் இருபக்கம் காட்டுமடா

முத்துத் தமிழ் பாடு
சிட்டு நடைப் போடு
தத்தி தத்தி விளையாடு
நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு

பட்டம் மேலே போகுது பாரு
பறவைப் போலே பறக்குது பாரு
வட்டமிட்டு ஆடுது பாரு
ஆடுது பாரு
மேலே வாலை நீட்டி பறக்குது பாரு
பறக்குது பாரு

பட்டம் மேலே போகுது பாரு
பறவைப் போலே பறக்குது பாரு
வட்டமிட்டு ஆடுது பாரு
ஆடுது பாரு
மேலே வாலை நீட்டி பறக்குது பாரு
பறக்குது பாரு

நூலை இழுத்தால் மேலே போகும்
வாலை அறுத்தால் கரணம் போடும்
காற்று அடித்தால் நிமிர்ந்து நிற்கும்
கயிறு அறுந்தால் குனிஞ்சி போகும்2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

இப்படத்தின் பாடல்கள் கண்ணதாசன் எழுதியவை. இசை K V மகாதேவன்.

தில்லான மோகனாம்பாள் படத்தின் வெற்றிக்குப் பின்பு, கொத்தமங்கலம் சுப்புவின் மற்றொரு கதையை, ஜெமினி SS வாசன் திரைக்கதை எழுதி, AP நாகராஜன் வசனம் இயக்கத்தில் தயாரித்தார். படம் வெற்றி அடையவில்லை.

சொல்லாமல் தெரிய வேண்டுமே என்ற மற்றொரு பாடல் S ஜானகி குரலில் அருமையாக இருக்கும்.

Unknown சொன்னது…நன்றி நாகராஜன் சார்,

நன்றி நாகராஜன் சார்,
சொல்லாமல் தெரிய வேண்டுமே பாடல் முன்னதாகவே இந்த பதிப்பில் உள்ளது இங்கே பாருங்கள்.

http://asokarajanandaraj.blogspot.com/2012/02/blog-post_11.html

கருத்துரையிடுக