பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 ஜனவரி, 2013

அம்மா என்பது தமிழ் வார்த்தை


இந்தப் பாடல் எனது இளம் வயது நினைவுகளை கொண்டு வருகிறது. அப்போது 1969/70 இருக்கும். நான் 4 வது வகுப்பில் இருந்தேன். அப்போது என்னுடன் படித்த ஒருவர் பெயர் கனிமொழி. நல்ல நண்பராக (நண்பி?) இருந்தார். வேறு நண்பர்கள் யாரும் நினைவில் இல்லை இவர் மட்டும் நினைவில் இருக்கிறார் என்றால் காரணம் எங்கள் குடும்பம் அப்போதுதான் மலேயாவிலிருந்து எங்கள் சொந்த ஊரான இப்போதைய திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் மன்னார்குடிக்கு குடி வந்தோம். எனக்கு தமிழ் பேசத்தான் தெரியும் எழுதப் படிக்கத் தெரியாது. அந்த வருடம் முழுவதும் எனக்கு வகுப்பில்  உதவியவர் அவர்தான் என்பதால் எனக்கு அவரை நல்ல ஞாபகம் இருக்கிறது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவரை பாடச் சொன்ன போது இந்தப் பாடலை அந்த வயதிலேயே மிக அருமையாகப் பாடினார். அவருக்கே இது ஞாபகம் இருக்குமா என்பது தெரியவில்லை.
அதன் பிறகு எங்களுக்கு சந்திக்க வாய்பில்லாமல் போனது. இப்போழுதும் இதை பார்க்க வாய்ப்பிருந்தால் அவர் என்னை தொடர்பு கொள்ளலாம். இந்தியா வரும் பொழுது சந்திக்க முடிந்தால் சந்திக்கலாம். அவரும் இன்னேரம் பேரன் பேத்தி எல்லாம் எடுத்திருக்கலாம். வாழ்க வளமுடன்.
சரி பாடலுக்கு வருவோம். சொல்ல வேண்டியதில்லை.T R பாப்பாவும், P சுசீலாவும் இணைந்தால் இனிமைக்கு பஞ்சம் ஏது? அதுவும் ஆழமான கருத்து கொண்ட பாடல்.


திரைப் படம்: டீச்சரம்மா (1968)
இயக்கம்: S R புட்டனா கனகல்
நடிப்பு: ஜெயஷங்கர், வாணிஸ்ரீ, விஜயகுமாரி
இசை: T R பாப்பா
குரல்: P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl81ODc2MzczX1AybVU3XzFjNzk/Amma%20Enbathu-Teacheramma.mp3


அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

அம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

அம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தைஅம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தைஅம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தைஅம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தைகவலையில் வருவதும் அம்மா அம்மா

கருணையில் வருவதும் அம்மா அம்மாகவலையில் வருவதும் அம்மா அம்மா

கருணையில் வருவதும் அம்மா அம்மாதவறு செய்தாலும் மன்னிப்புக்காக

தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மாஅம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தைபூமியின் பெயரும் அம்மா அம்மா

புண்ணிய நதியும் அம்மா அம்மா

தாய் மொழி என்றும் தாயகம் என்றும்

தாரணி அழைப்பதும் அம்மா அம்மாஅம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தைஅம்மா இருந்தால் பால் தருவாள்

அவளது அன்பை யார் தருவார்

அனாதை என்னும் கொடுமையை தீர்க்க

ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்

ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

அம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக