பின்பற்றுபவர்கள்

சனி, 14 ஜூன், 2014

ஒரு நாளிலே என்னவாம் உறவானதே


இயக்குனர் C V ஸ்ரீதரின் மற்றுமொரு காவியம்.
சேர்ந்து மெருகூட்டியவர்கள், இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், பாடியவர்களும் என்றால் தவறில்லைதான் .
படம் முழுவதுமாக ஐரோப்பாவில் எடுக்கப் பட்டிருந்தாலும் இந்தப் பாடல் காட்சி அங்கே படமாக்கப்படவில்லை என்பது  தெரிகிறது.


‘Oru naalile….’ from Sivantha Mann is a real class act.  TMS begins with ‘Oru naalile…’.  Suseela can’t wait for him to finish and interjects with a sexy ‘ennavam?’ (she sure knows 'ennavam'!!) TMS replies in a mono-syllable 'uravanathe’…and the mirth of point/counter-point continues. On screen, Sivaji and Kanchana, mirroring the same lustful emotions.   It is unbelievable to imagine such a romantic, sometimes raunchy, love duet was composed some forty years back.  Even today’s younger bunch of singers could not have done justice to the gaiety and frolic TMS brought forth in his voice in this song.  Would find a place in any top 10 list of TMS
- subramaniammohan.blogspot.com.

மிக அழகாக வர்ணித்திருக்கிறார். இதை தமிழ்ப்படுத்தினால் சாரம் குறைந்து போகும் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.
பாடலின் கடைசி வரியை சுசீலா அம்மா முடிக்கும் விதமே தனி அழகுதான்.
இசை: எம் எஸ். விஸ்வனாதன் 

குரல்கள்: டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இயக்கம்: சி வி ஸ்ரீதர் 
நடிப்பு: சிவாஜி, காஞ்சனா
ஒரு நாளிலே
என்னவாம்
உறவானதே
தெரியுமே
கனவாயிரம்
நினைவானதே

வா வெண்ணிலா
வா வெண்ணிலா இசையோடுவா
மழை மேகமே அழகோடு வா
மஹராணியே மடிமீது வா
மஹராணியே மடிமீது வா

வந்தால்
அணைக்கும்
சிலிர்க்கும்
ம் ம் ஹு ஹு ம் ம் துடிக்கும்

நாளை வரும் நாளை
என நானும் எதிர்பார்த்தேன்
காலம் இது காலம்
எனக் காதல் மொழி கேட்டேன்

போதை தரும் பார்வை
எனை மோதும் அலை மோதும்
போதை தரும் பார்வை
எனை மோதும் அலை மோதும்

போதும் எனக் கூறும் வரை
பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே
வரும் நாளெல்லாம் இது போதுமே

மஞ்சம் இது மஞ்சம்
என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும்
என் நெஞ்சில் ஒரு கோடு

தஞ்சம் இது தஞ்சம்
எனத் தழுவும் சுவையோடு
தஞ்சம் இது தஞ்சம்
எனத் தழுவும் சுவையோடு

மிஞ்சும் சுகம் யாவும்
வரவேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம் இது போதுமே
வரும் நாளெல்லாம் இது போதுமே


ஒரு நாளிலே
உறவானதே
கனவாயிரம்
ம் ம் ம் ம் ம் ம் ம்
 நினைவானதே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் பாடல் - வரிகளும்...!

கருத்துரையிடுக