பின்பற்றுபவர்கள்

சனி, 11 ஆகஸ்ட், 2012

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு, ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு 2 பாடல்கள்

வைதேகி காத்திருந்தாள் படத்திற்காக இளையராஜா இசையில் இரு  ஜாம்பவானின் பாடல்கள் இங்கு தனித் தனியே உள்ளது


திரைப் படம்: வைதேகி காத்திருந்தாள் (1984)
இசை: இளையராஜா
நடிப்பு: விஜயகாந்த், ரேவதி
இயக்கம்: R சுந்தர்ராஜன்
பாடியவர்: பி. ஜெயசந்திரன்

http://youtu.be/SEMdkRsrZ_Y




பாடியவர்: சுசீலா

http://youtu.be/nhpo86rMDlQ





ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன

அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வென்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது


*****************************************

ல ல ல ல ல ல
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து தீண்டாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது


வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மேகமே மேகமே பால்நிலா தேயுதே


இனிமையான ஒரு சோக கீதம். மனதை நெருடும் ஒரு பாடல்.

திரைப் படம்: பாலைவன சோலை (1981)
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல் :வைரமுத்து
நடிப்பு: சந்திரசேகர், சுஹாஸினி
இயக்கம்: ராபர்ட் ராஜசேகரன்


மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
தமரிஸ திம ததரின தமித தமித
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?பாவையின் ராகம் சோகங்களோ

பாவையின் ராகம் சோகங்களோ?நீரலை போடும் கோலங்களோ? மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தூரிகை எரிகின்றபோது - இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தூரிகை எரிகின்றபோது - இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம்கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
அது எதற்கோ ஓ ஓ ஓ 
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

வருக வருக திருமகளின் முதல் மகளே


மீண்டும் ஒரு சுற்றில் புரட்சி தலைவரின் பாடலுக்கு வந்திருக்கிறோம். இவரது பாடல்களில் P சுசீலா அம்மா மற்றும்  டி எம் ஸ் அவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. இது போன்ற பல, மனதை வருடும் இதமான அழகானப் பாடல்கள் அவரின் திரைப் படங்களை அலங்கரித்தன.

திரைப் படம்: தொழிலாளி (1964)
இயக்கம்: M A திருமுகம்
இசை: K V மகாதேவன்
பாடல்: மாயவ நாதன்
நடிப்பு: எம் ஜி யார், ரத்னா, K R விஜயா





http://www.divshare.com/download/15019299-768


இந்த படத்தின் நாயகி ரத்னா அவர்களின் சமீபத்திய படம். இவர்  பழம்பெரும் நடிகை G வரலக்ஷ்மியின்  (மயக்கும் மாலை பொழுதே நீ போ போ- குலேபகாவலி நினைவிருக்கிறதா) மகளாவார். நன்றி-சுக்ரவதனீ.



வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே

நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே

தென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்
தென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்

ஆ ஆ ஆ ஆ ஆ
தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதைய்யா நானம்
தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதைய்யா நானம்

வருக வருக திருமகளின் முதல் மகளே

கையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்
கையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்

ஆ ஆ ஆ ஆ ஆ
செம்பவள இதழ் வெடித்து சிந்துகின்ற மலரெடுத்து
சேர்த்து வைத்து தொடுப்பதுவும் அழகுதான்

வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை


கோவை ரவிஜியின் விருப்பப் பாடல் அருமை.
மேடையில் ஆடிடும் என்ற அழகான பாடலை இந்த தளத்தில் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்.
இந்தப் பாடலில் வரிகள், அற்புதமான மெட்டு, SPBன் இனிமையான குரல், பாடிய விதம், அவரின் அசத்தலான கிளாமர் குரல் சிரிப்பு, உண்மையிலேயே பாடல் அசத்துகிறது..

திரைப் படம்வண்டிக் காரன் மகன் (1978)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: அமிர்தம்



கார்த்திகை மாதம் கார்காலம்
கங்குளி எங்கும் பனிமூட்டம்
உடல் வேர்த்திட ஸ் ஸ் நின்றாள்
பருவச்சிலை
அதை வேடிக்கை பார்த்தது
ஹ் ஹ் ஹ ஹா ஹா ஹா ஆ

ஏன் சிரிக்கறே ஏன் சிரிக்கறே
பள்ளியறை  ஹ ஹ ஹா ஆ ஆ
ம் ம்
பள்ளியறை
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை ஸ் ஸ் ஹா
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தனில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தனில்லை

மடல் கொண்ட வாழை
உடல் கொண்ட காவல்
இடை கொள்ளவில்லை
அவள் கொண்ட சேலை

அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை
ஹ அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை
வந்தாள் சென்றேன் தந்தாள் 
செவ்வாய் மீது ஓயாமல் முத்தாடினாள்
வண்ணம் கொஞ்சும் அன்னம்
தன் தோளேறி போதைகள் கொண்டாடினால்

படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் நடுக்கமில்லை ஹா
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர
அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற
கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற
முன்னும் பின்னும் மின்னும் 
பொன்மானோடு ஆனந்த நீராடினாள்
மெத்தை கத்தும் தத்தை தன்
தாளங்கள் தாளாமல் போராடினாள்

ஆ ஆ ஆ ஆ ஹோ
குடம் கொண்ட வீணை
ஆ ஆ ஆ ஆ லா லா
அவன் கொண்டு மீட்ட
ஹா ஆ ஆ ஆ ஆ லா லா
குடம் கொண்ட வீணை
அவன் கொண்டு மீட்ட
சுகமிங்கு என்று ஸ்வரஸ்தானம் காட்ட
ம் ம் ம் ம் ம்
உறவென்ற ராகம் அரங்கேற்றமாக
இன்பம் என்னும் சந்தம்
தன் பாட்டாக பூங்கோதை தாலாட்டினாள்
இன்னும் இன்னும் என்று 
தன் காதார தான் கேட்டு பாராட்டினாள்
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் தடுக்கவில்லை
ம் ம் ம் ம் ஹா ஆ ஆ ஆ ம் ம் ம் ம் ஹா ஆ ஆ

புதன், 1 ஆகஸ்ட், 2012

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

வழக்கமான இனிய ஜெயசந்திரன் குரல் தேனொழுகும் சுனந்தா குரலுடன். பாடலின் ஒரு சில வரிகளில் ஒரு vibration இருப்பதை கவனியுங்கள். இனிமை.


திரைப் படம்:என் புருசந்தான் எனக்கு மட்டும்தான் (1989)
இயக்கம்: மனோபாலா
நடிப்பு: விஜயகாந்த், சுஹாஸினி, ரேகா
இசை: இளையராஜா







பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

ஓம் மாங்கல்யம் தந்துனா நென

மமஜீவன ஹெதுனா

கந்தெ பத்ரானி ஷுபகே

த்வம் தீய ஷரதம் ஷுபம்

மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்

கைதீண்டினால்தான் கல்யாணி பாடும்

எழுதாத புது இலக்கியம் உயிர் காதலில் விளையும்

இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்

மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே

பாயை விரித்திடும் பாட்டு படித்திடும் கான கருங்குயிலே

ஆசை குளத்தினில் நீந்தி குளிக்கையில் ஆனந்த பூஜை தொடங்குமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாடெழுதும் வண்ணப் புறா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி

நான் கொண்ட கண்கள் நாளாச்சி தூங்கி

நிறுத்தாமல் மலர் கணைகளை விடும் வாலிபம் இதுதான்

அரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான்

பிள்ளை பிறந்ததும் பள்ளியறைக் கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே

கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே

மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா