பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்

மிக லாவகமாகவும் எளிமையாகவும் இசையமைத்து சிறப்பாக பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: மாலதி (1970)
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெமினி, சரோஜாதேவி

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்
அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்

உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே - இல்லைக்
கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே
யாரும் சொல்லித் திரியாத இன்பக் கலையே - அதை
அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்..

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்

என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் - அங்கு
வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும்
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் - அங்கு
காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன்
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்..

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

ஆரம்ப கால எஸ்.பி.பி.யின் குரல் கேட்கக் கேட்கத் தெவிட்டாதது. இந்தப் பாடலும் அப்படியே! மிக ரசிக்க வைத்தது. அருமை. பகிர்விற்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல் ! பகிர்வுக்கு நன்றி !

கருத்துரையிடுக