பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 ஜூலை, 2012

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி


ஏதோ  ஒரு இசையில் ஏதோ ஒரு பாட்டு ஆனால் பாடியவர்கள் மிகப் பொறுப்பாக பாடி இருக்கிறார்கள். கங்கை அமரன் இசையில் அவர் எழுதிய பாடல். அது ஒரு காலம்.

திரைப்படம்: இளங்கன்று
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா







பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி

மானே நாலாம் மாசம் கேட்டேன் உன் சேதி
தேனே கேட்டா பேசி தீரேன் என் வியாதி
காதோரம் ரோசாப்பூவை நீ மோதி நாளாச்சு
பூவாசம் வீசும் காத்து அடடா உன் பெருமூச்சு
பத்து விரலும் உன்னைக் கொத்த வருமே
நெஞ்சுக்குள்ள அந்தப்புரம் வஞ்சிக்கொடி தந்த வரம்

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

ஏதோ ஏதோ சேதி நானோ பெண் ஜாதி
தானே நூலாய் மாறும் ஆஹா என் மேனி
மேலோடு பார்த்தால் போதும் திகட்டாத அனுபந்தம்
நீ தீண்டும் நேரம்தானே பொருள் மாறும் தலையங்கம்
சின்ன வயசு கொஞ்சம் மெல்லப் பழகு
தன்னனானா என்று வரும் பெண்ணுக்குள்ளே இன்பஸ்வரம்

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கேட்டிராத பாடல்... பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

கே. பி. ஜனா... சொன்னது…

கேட்டிராத பாடல். நன்றி. கங்கை அமரன் பல நல்ல இனிய இசை தந்திருக்கிறார். உதாரணமாக 'விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று...' என்ற பாடல்.

கருத்துரையிடுக