பின்பற்றுபவர்கள்

திங்கள், 16 ஜூலை, 2012

ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு


திரைப் படம்: நங்கூரம் (1979)
பாடியவர்கள்: S P B, ஸ்வர்னா
பாடல்: கண்ணதாசன்
இசை : V குமார் & காமதாசா
இயக்கம்: திமோதி வீரரத்னே
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி


Embed Music Files - Play Audio -











ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹா ஆ ஆஹா
ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு
ஆஹா ஆஹஹ .ஹா ஆ ஆ.ஹா
ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

கோடி வார்த்தைகளை சேர்த்து
வைத்துக் கொண்ட உள்ளம்
ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நினைக்கிறேன் சொல்ல மொழி இல்லை
எனக்குத்தான் என்ன நாணமோ
நீயும் மௌனராகம்
நானும் மௌனகீதம்
நீயும் மௌனராகம்
நானும் மௌனகீதம்
சொன்னால் ஏற்றுக்கொள்வாய்
என்னால் முடியவில்லை

 ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

அந்தி நேரம் உந்தன் மஞ்சள் மேனிதனைக்
கண்டு இந்த நெஞ்சில் அணை போல வந்த சுகம் உண்டு
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மழையிலே கொஞ்சம் நனைகிறேன்
வெயிலிலே கொஞ்சம் காய்கிறேன்
பனியே அதிகமானால் அதுவே அனலுமாகும்
பனியே அதிகமானால் அதுவே அனலுமாகும்
இல்லை என்று சொல்ல நீயும் வேறு அல்ல

 ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது மனம்
ஓடும் கேள்வி கேட்டு
 மனம் ஓடும் கேள்வி கேட்டு

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹஹ .ஹா ஆ ஆ.ஹா... என் உயிர்...
உயிர் பாடும் நூறு பாட்டு//

இனிமையான பாடல் என் மனதை கவர்ந்த வரிகள்
//நீயும் மௌனராகம் நானும் மௌனகீதம்
சொன்னால் ஏற்றுக்கொள்வாய்
என்னால் முடியவில்லை//
பாலுஜி தன் குரலில் சர்க்கரை பாகாக குழைத்து தந்திருப்பார். பகிர்விற்க்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல் வரிகள் சார் !

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


பாடல் வரிகளை ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

கருத்துரையிடுக