பின்பற்றுபவர்கள்

புதன், 18 ஜூலை, 2012

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்


76களில் இளையராஜாவின் வரவு M S விஸ்வனாதனின் இசையமைப்பில் பல மாற்றங்களை கண்டது. அதில் இந்தப் பாடல் போல வசன நடையில் பல பாடல்கள் உருவாகின. சில நன்றாகவே இருந்தன. அவற்றில் இந்தப் பாடலும் ஒன்று.

திரைப் படம்: நூல் வேலி (1979)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: S P பாலசுப்ரமணியம்
நடிப்பு: சரத் பாபு, சுஜாதா, சரிதா, கமல் ஹாசன்
இயக்கம்: K பாலசந்தர்



Music File Hosting - Audio Hosting -








ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்  போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹ
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
ஹா ஹா ஹா ஹா ஹா
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல்....

..ம்.. ..ம்.. ..ம்..

கவனித்தீர்களா... ஒவ்வொரு வரியும் ..ம்.. ..ம்.. ..ம்..என்று முடிகிறது....

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

பெயரில்லா சொன்னது…

அழகான, இனிமையான பாடல் பகிர்விற்க்கும் நன்றி சார்.

Raashid Ahamed சொன்னது…

கண்ணதாசனால் மட்டும் தான் இப்படிப்பட்ட பாடல்களை வழங்க முடியும். எத்தனை அற்புத வரிகள்.
இதற்கு முன்னால் அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் என்ற பாடலும், பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது.

பெயரில்லா சொன்னது…

because of changes in the cineworld this song was not reached to the height.
but still it is a good one. in the same movie one more song was there "Nana paduvathu nana nanum ila vayadhu mana" by spb and vani

Mkumar சொன்னது…

இளையராஜா வந்த பின் மெல்லிசை மன்னரின் இசையில் மாற்றங்கள் வந்தது என்பது ஏற்புடைய கருத்து அல்ல.

இளையராஜா, ரஹ்மான் முதல் இன்றைய அனிருத் வரையிலான அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் மெல்லிசை மன்னர்தான் பீஷ்மர்.

இளையராஜா தலைசிறந்த இசையமைப்பாளர், அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால் அவரை பாராட்டும் போது மெல்லிசை மன்னர் இளையராஜாவிடம் கற்றுக் கொண்டார் என்பது போல் ஒரு கருத்து இழையாடுகிறது. அதனை ஏற்றுக்கொள்ள இயலாது.

கருத்துரையிடுக