பின்பற்றுபவர்கள்

வியாழன், 26 ஜூலை, 2012

அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை

திரு கோவை ரவி அவர்களுடன் நாமும் இந்த இனிய பாடலை கேட்டு மகிழ்வோம்.


திரைப் படம்: நட்சத்திரம் (1980)
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல்: வாலி
இயக்கம்: தாசரி நாராயண ராவ்
நடிப்பு: கமல், ஸ்ரீபிரியா





அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவொரு நடமாடும் பொன்மகள்
ரஞ்சனி சிவரஞ்சனி சிவரஞ்சனி

கரும்புகள் தென்மொழி, அரும்புகள் புன்னகை
கரும்புகள் தென்மொழி, அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ் சங்க கீதம்
ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ் சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள ராகம்
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம்
தேனுலாவிடும் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் வேகம்
தாமரை பூவின் சூரிய தாகம்
காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
மொழியோ ஆலய சங்கொலி
இடையோ அசைந்திடும் கிங்கிணி
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
ஆ ஆ ஆ ஆ
அவள் தஞ்சை தரணியில் கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவள் பக்தனன்றோ
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல் ! நன்றி சார் !

NAGARAJAN சொன்னது…

இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன், வாலி அல்ல. இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன் அவர்கள்தான்.

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி சார். உடனே என் விருப்பத்தை பதிவாக வெளியிட்டுள்ளீர்கள். என்னை எண்பதுகளூக்கு அழைத்து சென்று விட்டீர்கள். தொடக்கத்தில் பாலுஜி ஓர் ஆலாபனை இழுப்பாரே அந்த இழுவையில் விழுந்தவன் தான் இன்னும் எழமுடியவில்லை. மீண்டும் நன்றி சார். எனக்கு கிடைக்காத அறிதான பாடல்களை ஒவ்வொன்றாக கேட்பேன் சிரமம் பார்க்காமல் பதிவேற்றுங்கள் உங்கள் பதிவை பா.நி.பா தளத்தில் தொடர்பு கொடுக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

மீண்டும் நானே தான் சார். இதோ கீழே உள்ள சுட்டியில் 31.08.2007 அன்றே பா.நி.பா தளத்தின் சொந்தக்காரர் பாஸ்டனில் வசிக்கும் பெப் சுந்தர் அவரகளின் பாலுஜி ஆலாபனை குரல் போன்றே அவரின் விமர்சனம் அருமை. பல பதிவுகளின் அவரின் பாலுஜியின் குரலைபற்றிய அலசல்கள் அலம்பல்கள் அற்புதமாக இருக்கும் ரசிப்பதற்க்கும் அதன் படி எழுதுவதற்க்கும் ஒரு தனித்திறமை வேண்டும். நான் அதில் கத்துக்குட்டி தான். இதோ மீண்டும் கிணற்றுதவளை நேயர்களூக்கும். ரசிகர்களின் ரசிப்பு தன்மையையும் வாசிக்க ஒரு வாய்ப்பு. நிச்சயம் பாருங்கள் உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள் சார்.

http://myspb.blogspot.in/2007/08/520.html

Unknown சொன்னது…

கோவை ரவி ஸார், தனபாலன் ஸார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இங்கு நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளேன். நீங்கள் சில பாடல்களை பதிவிடக் கேட்கும் போது நிஜமாகவே நானும் முழு முயற்சியுடன் ஈடுபடுகிறேன். ஆகையால் தொடர்ந்து கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க.
நாகராஜன் ஸார், சில தவறுகள் நேர்கிறது. வலையில் சரி பார்க்காமல் வெளியிடுகிறேன். நேரமின்மையே காரணம். பொறுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

//நீங்கள் சில பாடல்களை பதிவிடக் கேட்கும் போது நிஜமாகவே நானும் முழு முயற்சியுடன் ஈடுபடுகிறேன். //

சொல்லீட்ங்கல்ல பாடல்களை தேடி பிடிச்சு கேட்கறேன்.

//சில தவறுகள் நேர்கிறது. வலையில் சரி பார்க்காமல் வெளியிடுகிறேன். நேரமின்மையே காரணம். பொறுத்துக்கொள்ள வேண்டும். //

இதே பிரச்சனை தான் எனக்கும்.

TSK சொன்னது…

திரைப் படம்:- நட்சத்திரம், 1980;
இசை:- ஷங்கர் கணேஷ்;
பாடல்:- கண்ணதாசன்;
பாடியவர்:- SPB;
நடிப்பு:- மோகன் பாபு, ஸ்ரீபிரியா;
இயக்கம்: தாசரி நாராயண ராவ்.

கருத்துரையிடுக