தெளிவான பாடல் வரிகள், அழகான S P Bயின் குரல், மென்மையான இசை, இலக்கியவாதி ஜெயகாந்தனின் சில சிறந்த பாடல்களில் ஒன்று. பாடல் வரிகளை சிறப்பித்துக் காட்டும் பின்னனி இசை. மனம் லயித்து போகிறது. ரசிக்க தெரிந்தவர்களுக்கு இது அருமையான பாடல். இந்த திரைப் படம் வெளிவரவில்லை.
திரைப் படம்: புது செருப்பு கடிக்கும் (1978)
இசை: M B ஸ்ரீனிவாசன்
இயக்கமும் பாடலும்: ஜெயகாந்தன்
Podcast Hosting - Listen Audio -
சித்திரப் பூ சேலை
சிவந்த முகம்
சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி
எழில் மூடிவரும்
முழு நிலவோ
மூடிவரும்
முழு நிலவோ
சித்திரப் பூ சேலை
மீன் கடிக்கும் மெல்லிதழை
நான் கடித்தால் ஆகாதோ
தேனின் ருசி
தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனா
சித்திரப் பூ சேலை
மஞ்சள் பூசும்
இடமெல்லாம்
என் மனம் பூசல்
ஆகாதா
கொஞ்சம் என்னை
குங்குமமாய்
குழைத்தெடுத்தால் வாரேனா
சித்திரப் பூ சேலை
படிக் கட்டில் ஏறி வரும்
பாதத்தெழில் பார்ப்பதற்கு
படிக் கட்டின்
இடையிலே ஓர்
பலகையாய் மாறேனா
சித்திரப் பூ சேலை
முக்காலும் துணி மறைத்து
நீ மூலையிலே போய் நின்று
உன் சொக்காயை இடுகையில் நான்
சொக்காகி மூலைச் சுவராகி
முன்னின்று பாரேனா
சித்திரப் பூ சேலை
சிவந்த முகம்
சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி
எழில் மூடிவரும்
முழு நிலவோ
மூடிவரும்
முழு நிலவோ
சித்திரப் பூ சேலை
திரைப் படம்: புது செருப்பு கடிக்கும் (1978)
இசை: M B ஸ்ரீனிவாசன்
இயக்கமும் பாடலும்: ஜெயகாந்தன்
Podcast Hosting - Listen Audio -
சித்திரப் பூ சேலை
சிவந்த முகம்
சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி
எழில் மூடிவரும்
முழு நிலவோ
மூடிவரும்
முழு நிலவோ
சித்திரப் பூ சேலை
மீன் கடிக்கும் மெல்லிதழை
நான் கடித்தால் ஆகாதோ
தேனின் ருசி
தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனா
சித்திரப் பூ சேலை
மஞ்சள் பூசும்
இடமெல்லாம்
என் மனம் பூசல்
ஆகாதா
கொஞ்சம் என்னை
குங்குமமாய்
குழைத்தெடுத்தால் வாரேனா
சித்திரப் பூ சேலை
படிக் கட்டில் ஏறி வரும்
பாதத்தெழில் பார்ப்பதற்கு
படிக் கட்டின்
இடையிலே ஓர்
பலகையாய் மாறேனா
சித்திரப் பூ சேலை
முக்காலும் துணி மறைத்து
நீ மூலையிலே போய் நின்று
உன் சொக்காயை இடுகையில் நான்
சொக்காகி மூலைச் சுவராகி
முன்னின்று பாரேனா
சித்திரப் பூ சேலை
சிவந்த முகம்
சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி
எழில் மூடிவரும்
முழு நிலவோ
மூடிவரும்
முழு நிலவோ
சித்திரப் பூ சேலை
1 கருத்து:
இது மட்டுமில்லை சார் ! இது போல் வெளிவராத நிறைய படங்களில் பல அற்புத இனிய பாடல்கள் ஒளிந்து கிடக்கின்றன. இது போன்ற பொக்கிஷங்களையெல்லாம் தங்களை போன்றவர்கள் வெளிக்கொண்டுவந்தால் தான் உண்டு.
கருத்துரையிடுக