பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 ஜனவரி, 2013

தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத் துயர்

சில பாடல்கள் என்னை ஸ்தம்பிக்க வைக்கும். அதுவும் இது போன்ற பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்களை ஆண் கவிஞர்கள் எப்படி அப்படியே பெண்களின் உள்ளத்தை பிரதிபலிக்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் ஒரு ஆச்சர்யம். இந்த மாதிரி பாடல்களுக்கு கண்ணதாசனும், வாலியும் திறமைசாலிகள்.

திரைப் படம்: பச்சை விளக்கு (1964)
குரல்கள்: P சுசீலா, L R ஈஸ்வரி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, S S ராஜேந்திரன், விஜயகுமாரி, புஷ்பலதா,
இயக்கம்:A  பீம்சிங்க்


http://asoktamil.opendrive.com/files/Nl81NjY4NjI3X2QydEc3X2ZiZTY/Thoodhusella.mp3






தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி

தென்றல் தொட்டதடி
திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
ஆஹா
தென்றல் தொட்டதடி
திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி

ஆஹா
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
பருவம் தூங்குமே தலைவி

வெண்ணீர் நதியைப் பன்னீர் எனவே
பேசலாகுமோ தோழி

இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி

கடையிருந்தும் பொருள் கொள்வாரில்லையே
கலக்கம் வராதோ தோழி

ஆஹா
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி

முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி

காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி

காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி

ஆஹா
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

ஆஹா ஆஹா ஆஹா

தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

ஆஹா ஆஹா ஆஹா 

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

கண்ணதாசன், சுசீலா எல்ஆர் ஈஸ்வரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி. இப்படிப்பட்ட கூட்டணியில் பாடல் எப்படியிருக்கும் ! இனிமைக்கு சொல்லவா வேண்டும். சுசீலாவும் ஈஸ்வரியும் போட்டி போட்டல்லவா பாடியிருப்பார்கள்.

கருத்துரையிடுக