பின்பற்றுபவர்கள்

புதன், 16 ஜனவரி, 2013

தூவானம் இது...தூவானம் இது தூவானம் thoovanam ithu thoovanam

இனிமை, மென்மை, கவிதை, காதல் ரசம் ததும்பும் பாடல்.

திரைப் படம்: தாழம்பூ(1965)
நடிப்பு: எம் ஜி யார், K R விஜயா
இயக்கம்: S ராம்தாஸ்
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
பாடிய குரல்கள்: T M சௌந்தர்ராஜன், P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl81MjI0Njg5X0JXSnQ2Xzc2ODY/thoovanam-thazampoo.mp3






தூவானம் இது தூவானம் இது தூவானம்
தூவானம் இது தூவானம் இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது

தூவானம் இது தூவானம் இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது  

தூவானம் இது தூவானம் இது தூவானம்

பூவாடும் இளம் கூந்தலுக்குள்
புகுந்து புகுந்து ஓடுது

மேலாடை தனில் மழை விழுந்து
நனைந்து நனைந்து மூடுது

பூவாடும் இளம் கூந்தலுக்குள்
புகுந்து புகுந்து ஓடுது

மேலாடை தனில் மழை விழுந்து
நனைந்து நனைந்து மூடுது

மானோடும் சிறு விழியில் இட்ட மையும்
கரைந்து ஓடுது

தேனூறும் இதழ் மீது வந்து
பனிதுளிப் போல் தேங்குது

தூவானம் இது தூவானம் இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது

தூவானம் இது தூவானம் இது தூவானம்

உக்காரச் சொல்லி நான் அழைக்கும் போது
ஓட்டம் என்ன முன்னாலே

என் பக்கா மனசே இந்த வெட்கம் வந்து
பாய்ந்திழுக்குது பின்னாலே

உக்காரச் சொல்லி நான் அழைக்கும் போது
ஓட்டம் என்ன முன்னாலே

என் பக்கா மனசே இந்த வெட்கம் வந்து
பாய்ந்திழுக்குது பின்னாலே

தக்க நேரம் வந்துவிட்டது
தையல் போடு கண்ணாலே

இந்த சரசம் ஆடக் கூடாது
ஒரு தாலி கட்டும் முன்னாலே

தூவானம் இது தூவானம் இது தூவானம்

சொட்டு சொட்டா உதிருது உதிருது

அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது

தூவானம் இது தூவானம் இது தூவானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக