பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ

நமது தலை சிறந்த பாடகர்கள் இளமையில் அல்லது ஆரம்பத்தில் பாடிய பாடல்களும் இனிக்கும் இளமை வகையை சார்ந்தது. இங்கே K J யேஸுதாஸ்.

திரைப் படம்: நம்ம வீட்டு லக்ஷ்மி (1966)
பாடியவர்கள்: K J யேஸுதாஸ், L R ஈஸ்வரி
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு : முத்துராமன், பாரதி, A V M ராஜன், வாணிஸ்ரீ

http://asoktamil.opendrive.com/files/Nl81NzA4OTYwX05seTNEX2QyYzY/Alangaram%20kalayamal.mp3

அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ

அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ

அழகோடு விளையாடி சுவைத்தால் அது என்ன சுவையோ

அழகோடு விளையாடி சுவைத்தால் அது என்ன சுவையோ

அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ

பதமாகக் கொஞ்சம் மெதுவாக

இதமாகக் காதல் மிதமாக

பதமாகக் கொஞ்சம் மெதுவாக

இதமாகக் காதல் மிதமாக

பல விதமாக உள்ளம் வசமாக

பழகுவதென்ன சுகமாக

நடமாடும் தங்க குடமாக

நதியோடும் செல்லும் படகாக

நடமாடும் தங்க குடமாக

நதியோடும் செல்லும் படகாக

தொட்டு வரும் காற்றில் கட்டி ரதமாக

தொடருவதென்ன துணையாக

தொடருவதென்ன துணையாக

அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ

மனம் வேண்டும் ஆசை குணம் வேண்டும்

மலராடும் வண்ணக் குழல் வேண்டும்

பட்டு முகம் வேண்டும் சிட்டு விழி வேண்டும்

பழ ரசம் ஊறும் இதழ் வேண்டும்

மண மாலை ஒன்று தர வேண்டும்

மலர் தூவும் பெண்கள் வர வேண்டும்

சிந்து நடைப் பாட்டும் பள்ளி விளையாட்டும்

திருமணம் கண்டே பெற வேண்டும்

அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ

அழகோடு விளையாடி சுவைத்தால் அது என்ன சுவையோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக