பின்பற்றுபவர்கள்

வியாழன், 3 ஜனவரி, 2013

புது முகமே சிறு மது குடமே


இசையமைப்பாளர் G தேவராஜனின் அபூர்வ பாடல். கமல் இந்தப் படத்தில்தான் முதன் முதலாக சொந்தக் குரலில் ஞாயிறு ஒளி மழையில் என்ற பாடலைப் பாடினார் என நினைக்கிறேன்.

திரைப் படம்: அந்தரங்கம் (1975)
இசை: G தேவராஜன்
பாடியவர்கள்:  K J யேஸுதாஸ், P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: கமல், தீபா என நினைக்கிறேன்
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl80OTM2NDc3X2lpeGVCX2NiMDM/puthu%20mugame%20siru.mp3புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது என் முகமே
என் முகமே

புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

கால்களின் அழகினை கவிஞர் கண்டால்
ஒரு காவியம் பிறக்கும் தமிழினிலே
தீபா தீபா

காவியம் பிறந்து லாபமில்லை
உன் கைகள் சொல்லட்டும் கவிதைகளை
காந்தா காந்தா

சங்கு முழங்கிடும் கோவிலிலே
அது வந்தது எப்படி மேனியிலே

கண்டதில்லை இது மழலையிலே
இது கனியாய் கனிந்தது பருவத்திலே

ஒருவரும் இதுவரை தொட்டதில்லை
அதில் ஒரு முத்தம் இதுவரை பட்டதில்லை

காயம் படாதது உன் இதழே
அதை கண்டதும் புரிந்தது என் மனமே
தீபா தீபா

காயம் படா இதழ் காய்கின்றது
உனை கண்டதும்தான் இன்று கனிகின்றது

கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன்
அதை கல்யாணம் ஆனதும் கண்டு கொள்வேன்

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

G.தேவராஜன் !! அதிகம் அறியப்படாத ஒரு அற்புத இசையமைப்பாளர். குறைவான படங்கள் இசை அமைத்திருந்தாலும் அத்தனையும் அருமையானவை.

கருத்துரையிடுக