பின்பற்றுபவர்கள்

வியாழன், 3 ஜனவரி, 2013

புது முகமே சிறு மது குடமே


இசையமைப்பாளர் G தேவராஜனின் அபூர்வ பாடல். கமல் இந்தப் படத்தில்தான் முதன் முதலாக சொந்தக் குரலில் ஞாயிறு ஒளி மழையில் என்ற பாடலைப் பாடினார் என நினைக்கிறேன்.

திரைப் படம்: அந்தரங்கம் (1975)
இசை: G தேவராஜன்
பாடியவர்கள்:  K J யேஸுதாஸ், P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: கமல், தீபா என நினைக்கிறேன்
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl80OTM2NDc3X2lpeGVCX2NiMDM/puthu%20mugame%20siru.mp3







புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது என் முகமே
என் முகமே

புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

கால்களின் அழகினை கவிஞர் கண்டால்
ஒரு காவியம் பிறக்கும் தமிழினிலே
தீபா தீபா

காவியம் பிறந்து லாபமில்லை
உன் கைகள் சொல்லட்டும் கவிதைகளை
காந்தா காந்தா

சங்கு முழங்கிடும் கோவிலிலே
அது வந்தது எப்படி மேனியிலே

கண்டதில்லை இது மழலையிலே
இது கனியாய் கனிந்தது பருவத்திலே

ஒருவரும் இதுவரை தொட்டதில்லை
அதில் ஒரு முத்தம் இதுவரை பட்டதில்லை

காயம் படாதது உன் இதழே
அதை கண்டதும் புரிந்தது என் மனமே
தீபா தீபா

காயம் படா இதழ் காய்கின்றது
உனை கண்டதும்தான் இன்று கனிகின்றது

கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன்
அதை கல்யாணம் ஆனதும் கண்டு கொள்வேன்

2 கருத்துகள்:

Raashid Ahamed சொன்னது…

G.தேவராஜன் !! அதிகம் அறியப்படாத ஒரு அற்புத இசையமைப்பாளர். குறைவான படங்கள் இசை அமைத்திருந்தாலும் அத்தனையும் அருமையானவை.

தீபன் சொன்னது…

அந்தரங்கம் படத்தில் வந்த பாடல் வரிகளைத் தந்த நண்பரே நன்றி.. இளமை கொஞ்சிய மலையாளக் குட்டி தீபாவின் முதல் தமிழ்ப் படம்..அந்தரங்கம்.. பதிமூன்றே வயது நிரம்பிய (1962ல் பிறந்த தீபா - படம் வந்த ஆண்டு 1975-கணக்கு சரிதானே) தீபாவை தயாரிப்பாளர் முக்தா நன்றாகவே அறிமுகப் படுத்தியுள்ளார்.. நீச்சல்உடைக் காட்சி, உடற்பயிற்சி, அழகுநிலயக் காட்சி என புகுத்தி, தீபாவின் அங்கங்களைக் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காண்பித்துள்ளார். இந்தப் படம் வந்தபோது,படத்தின் ஒரு போஸ்டர் காட்சி, தீபா நீச்சல் உடையில் குளத்திலிருந்து மேலே ஏறி வரும்போது தீபாவின் மார்புப் பிரிவுகள் தெரிவது போல இருக்கும்..சேலத்தில் இந்தப் படம் சங்கம் தியேட்டரில் வெளிவந்த போது ஊரெங்கும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் காட்சி ஆபாசமாக இருக்கிறது என்று சேலம் மகளிர் அணி புகார் கொடுத்ததை அடுத்து, அந்த மார்புப் பிரிவு உள்ள இடத்தை மேலும் ஒரு ஸ்டிக்கர் அடித்து மறைத்தார்கள்.. வழக்கத்தை விட கூட்டம் தியேட்டரில் அலை மோதியது.. இந்த பாடல் வரும் காட்சி, சேலம் ஏற்காடு மலையில் எடுக்கப்பட்டது..செழிப்பான தொடைகள் தெரிய தீபா அந்தக் காலத்து நாகரிக உடையாக தொடை தெரிய இருக்கும் :மினி" அணிந்திருப்பாள் தீபா..ஆரம்பப் பாடலான, கமல் சொந்தக் குரலில் பாடும் ஞாயிறு ஒளி மழையில் இவளது வளப்பமான உடலைக் காணலாம்..இன்னொரு பாடலில், சேலை ஜாக்கெட்டில் கமலுடன் டூயட் பாடும் காட்சியில் கமல் இவளது முந்தானையை எடுத்து இடுப்பில் செருகி விட்டு ஜாக்கெட்டுடன் ஆட விட்டு, மார்பகங்களைக் காணும் வகையில் காட்சி இருக்கும்.. நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த பாடலில் வரும், சங்கு கோவிலில் தானே இருக்கும் இங்கே எப்படி உன் மார்பில் இருக்கிறது என்று தீபாவின் முலைகளை கோவில் சங்கிற்கு உவமையாகக் கூறும் கவிஞருக்கு, இயக்குனர் தீபாவை பற்றி என்ன விதமாகக் கூறியிருப்பார் என அறிய முடிகிறது...படம் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் தீபாவுடன் கமல் பாடும் மூன்று பாடல் காட்சிகளும் கலரில் இருக்கும்.. இந்த படத்தில் தீபா, தீபா என்றே அழைக்கப்படுகிறார்...கமல் பெயர் காந்தன்.. மொத்தத்தில் இளமையைத் தட்டி எழுப்பிய படம்.. நன்றி

கருத்துரையிடுக