பின்பற்றுபவர்கள்

திங்கள், 21 ஜனவரி, 2013

பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம்

இனிமையான குரல் மற்றும் இசையில் புரட்சி தலைவரின் ஒரு நல்ல பாடல்.

திரைப் படம்: பாசம் (1962)
பாடியவர்கள்: P சுசீலா, P B S
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: T R ராமண்ணா
நடிப்பு:  எம் ஜி யார், சரோஜா தேவி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி 



Upload Music - Upload Audio Files -








பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


கண்ணம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா..

கண்ணம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா..

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ வண்ண பாடம் சொல்ல எண்ணமில்லையா..


பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..


மஞ்சள் வண்ண வெயில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்போது ஆசையில்லையா..

மஞ்சள் வண்ண வெயில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்போது ஆசையில்லையா..

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா என்று அள்ளி கொண்ட மங்கையில்லையா..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை பட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா..


நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசையில்லையா..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் நிறைய பாடல்களில் இந்த பாடல் அனைவராலும் விரும்பப்படுகிறது. அதுவும் எங்கள் புரட்சி தலைவர் படத்தில் இடம் பெற்றது இன்னும் சிறப்பு.

கருத்துரையிடுக