இனிமையானப் பாடல்கள் நிறைந்த இந்தப் படத்தில் அனைத்து பாடல்களுக்கான காட்சிகளும் ஒரு காவியமான படப்பிடிப்பு. அப்போதைய வண்ணப் படமாக வெளிவந்து சக்கை போடு போட்டது. உண்மையான இன்னிசை மழை என்று இந்தப் படப் பாடல்களைச் சொல்லலாம்.
திரைப் படம்: வெண்ணிற ஆடை (1965)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
பாடல்: இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசன் எழுதியது என நினைவு.
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: ஸ்ரீகாந்த், ஜெயலலிதா
http://asoktamil.opendrive.com/files/Nl80OTgwODg4X2N3NG5sX2VhZGQ/Ammamma%20kaatru.mp3
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி
கன்னம் கொஞ்சம் வாடும்
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
யாரோ வந்து நேரே என்னை
மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ
நீரில் நின்று தேனும் தந்து
அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ
தள்ளாடி தள்ளாடி
செல்லும் பெண்ணை தேடி
சொல்லாமல் கொள்ளாமல்
துள்ளும் இன்பம் கோடி
அம்மம்மா ஆ ஆ ஆ
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டு பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி
கன்னம் கொஞ்சம் வாடும்
ஏதோ இன்பம் ஏதோ தந்து
என்னை தொட்டு செல்லும் வெள்ளமே
தானே வந்து தானே தந்து
தள்ளி தள்ளி செல்லும் உள்ளமே
அந்நாளில் என்னாலும்
இல்லை இந்த எண்ணம்
அச்சாரம் தந்தாயே
அங்கம் மின்னும் வண்ணம்
அம்மம்மா ஆ ஆ ஆ
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டு பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
ஆசை வெள்ளம் ஓடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக