பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

தலையைக் குனியும் தாமரையே

எஸ் பி பியுடன் ராஜேஸ்வரியின் குரல் நல்ல தேர்வு. கர்நாடக இசை பின்னணியில் எஸ் பி பியின் வழக்கமான touch உடன் இனிமையான பாடல்.
காட்சி சற்று அமெசூர்த்தனமாக இருந்தாலும், இளமை கொலுவிருக்கும் பாடல்.


திரைப் படம்: ஒரு ஓடை நதியாகிறது (1983)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்  ராஜேஸ்வரி 
வரிகள்: வைரமுத்து 
இசை: இளையராஜா 
இயக்கம்: C V ஸ்ரீதர் 
நடிப்பு: ரகுவரன், சுமலதா.











தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே 
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து 
தலையைக் குனியும் தாமரையே 

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம் 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம் 

பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம் 
பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம் 
அமுதம் வழியும் இதழைத் துடைத்து 
விடியும் வரையில் விருந்து நடத்து 

தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து  

தலையைக் குனியும் தாமரையே

காத்திருந்தேன் அன்பே
இனிக்  காமனின் வீதியில் தேர் வருமோ 

பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ 

ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா 

நீயொரு பொன்வீணை
அதில் நுனிவிரல் தொடுகையில் பல சுரமா 


பூவில் நுகர்ந்தது முதல்முறையா 

ம் ம் ம் ம் ம் 

வேதனை வேலையில் சோதனையா 

புது முறையா
இது சரியா 
 
சரி சரி பூவாடைக் காற்று 
ஜன்னலை சாத்து 
 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 

பூவாடைக் காற்று 
ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

இரண்டு நதிகள் இணைந்து நடக்கும் 
புதிய அலைகள் கரையை உடைக்கும் 

தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து


தலையைக் குனியும் தாமரையே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக