ஒருக்காலும் இல்லை
ஒருக்காலுமில்லை...
கதைக்கேற்ற பாடல் எழுதிய காலமது. இப்போது கதையும் இல்லை பாடலும் இல்லை.
மலரில்லை என்றால் மங்கை இல்லை. மங்கையில்லை என்றால் மலரில்லை......
திரைப் படம்: அன்னையும் பிதாவும் (1969)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: லக்ஷ்மி, சிவகுமார், A V M ராஜன்
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு
பாடியவர்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்
ஓ
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்
ஓ ஓ
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
நீராடும் கண்கள் ஆகாய கங்கை
போராடும் உள்ளம் பாதாள கங்கை
நீராடும் கண்கள் ஆகாய கங்கை
போராடும் உள்ளம் பாதாள கங்கை
சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல
சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல
வார்த்தைகள் இல்லை எண்ணங்கள் சொல்ல
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்
ஓ ஓ
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்
ஓ ஓ
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்
நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை
கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்
நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை
நீ வரவேண்டும் ஏன் வரவில்லை
நீ வரவேண்டும் ஏன் வரவில்லை
நான் வரலாமா ஒருக்காலுமில்லை
ஒருக்காலும் இல்லை
ஒருக்காலுமில்லை
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்
ஓ ஓ
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
3 கருத்துகள்:
சுசீலாம்மாவின் பாடல்களில் இனிமையான ப;ஆடல்.பிடித்த பாடல்.
நன்றி ஸ்ரீராம். சுசீலா அம்மாவின் இனிமையான பாடல்களில் இதுவுமொன்று என எடுத்துக் கொள்ளலாம்.
In the Divine Vocals of Ma Saraswathi Susheelamma - Soulful Rendition with perfect clarity & diction.
கருத்துரையிடுக