பின்பற்றுபவர்கள்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

நிலவோடு வான்முகில் விளையாடுதே nilavodu vaan mugil

இயற்கையில் எவ்வுயிரும் தனித்தியங்குவதில்லை, இயங்கவும் இயலாது. ஓருயிர் மற்றோருயிரைச் சார்ந்தே இயங்குகின்றது. ஓருயிர் மற்றோருயிரை உணவாக உட்கொள்கிறது. அவ்வுணவைப் பிரிதோருயிருடன் பகிர்ந்து உண்கிறது. அது போலவே ஐம்புலன்களாலும் ஓருயிர் அனுபவிக்கும் சுகங்கள், துயர்கள் அனைத்தும் பிற உயிர்களுடன் சேர்ந்தே அனுபவிப்பது சாத்தியமாகும். புலன்களுக்கப்பால் அப்புலன்களை இயக்கக்கூடிய மனம் சார்ந்த இன்ப துன்பங்களையும் பிற உயிர்களுடன் கலந்து கூடியே அனுபவிக்கலாகும். தனக்காக மட்டும் எவரும் வாழ்தல் சாத்தியமன்று. அனைவரும் வெறுத்தொதுக்கத்தக்க குற்றவாளிகளுக்கும் பிரியமானவர்கள் உலகத்தில் 
இருந்தே தீருவர். இது உலக நியதி.

இந்நியதிப்படியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் காதலும் நிலைபெறுகிறது. ஒருவரது துணையை மற்றவர் மனம் நாடுகின்றது. தன் துணைவர் அருகில் இல்லாத நேரங்களில் மனம் மிகவும் அல்லல் படுகின்றது, படுத்துகின்றது. இயற்கையில் இவ்வுலகின் ஒப்பற்ற அழகுக்கு சிகரம் வைத்தாற் போன்று விளங்கும் வெண்ணிலாவுடன் விண்ணிற் பரவிப் பரந்து, பிரிந்தொன்று சேர்ந்து பல விதமாய்த் தோற்றமளிக்கும் மேகம் விளையாடுகின்ற விளையாட்டு கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிதாகத் தோன்றுகின்றது. நிலாவை சில காலம் மறைத்தும், சில காலம் வெளியே காண்பித்தும் என அம்மேகம் விளையாடும் கண்ணாமூச்சி ஒருவரைத் தன் காதல் துணையின் பால் நாட்டம் கொள்ளச் செய்வதில் வியப்பேதுமில்லையன்றோ?
நன்றி:
http://www.thamizhisai.com/












திரைப்படம்: ராஜ ராஜன் (1957)
இயற்றியவர்: கு.ச. கிருஷ்ணமூர்த்தி
இசை: கே.வி. மகாதேவன்
குரல்கள்: சீர்காழி கோவிந்தராஜன், ஏ.பி. கோமளா
இயக்குனர்: T V சுந்தரம்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி

நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான்முகில் விளையாடுதே 

எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்பக் கதை பேசுதே
இனிதாகவே இன்பக் கதை பேசுதே 

நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான்முகில் விளையாடுதே 

புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா
மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
ஓ 

நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்தநிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான்முகில் விளையாடுதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக