பின்பற்றுபவர்கள்

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

பார்வை யுவராணி கண்ணோவியம் (Parvai uyavarani kannoviyam)

இந்த இனிமையான பாடலை நான் இன்று பாரிசிலிருந்து வழங்குகிறேன். எல்லா நாடுகளும் இனிமைதான். இந்தியநாட்டு மக்களும் சுத்தமும் இன்னும் கொஞ்சம் நாகரிகமும் கற்றுக் கொண்டால் நம்மை மிஞ்ச ஆள்  கிடையாது.
பொதுவிடத்தில் எச்சில் துப்புவதும் தூணைக் கண்டால் காலை தூக்குவதும், உழைக்காமால் உண்ண  நினைப்பதும் தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதும் அறவே, இல்லை, கொஞ்சம் குறைந்தாலும் நமது மதிப்பு உலக அரங்கில் உயரும். ஆனால் இவையெல்லாம் நாம் நமது பாரம்பரியம் பெருமை கலாச்சாரம் என்றல்லவா பீத்திக் கொண்டிருக்கிறோம்? என்ன புலம்பி என்ன பயன்?  நம்மை திருத்த அடுத்தவர் வரக் கூடாது.
நாம் பாட்டை ரசிப்போம்.

திரைப் படம்: சிவந்த மண்.
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
குரல்கள்: டி எம் சௌந்தரராஜன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இயக்கம்: சி வி ஸ்ரீதர் 
நடிப்பு: சிவாஜி, காஞ்சனா












பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாலென்று சொன்னாலும்
பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
நூலென்ற இடை
இன்னும் நூறாண்டு சென்றாலும்
தேர்கொண்ட ஊர்கோலமே
இன்று நானும் கவியாக யார் காரணம்
அந்த நாளும் விளையாடும் விழி காரணம்

பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்

கால் வண்ணம் சதிரா
கை வண்ணம் விளையாடும்
தென்னாட்டுப் பொன் வண்ணமே
மான் வண்ணம் என்றாலும்
மலர் வண்ணம் என்றாலும்
குறைவென்று தமிழ் சொல்லுமே
வண்ணம் பாட
புது வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி
முகம் பார்த்து பதம் பாடினேன்

பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
பார்வை யுவராணி கண்ணோவியம்

2 கருத்துகள்:

டாக்டர் பெ.சந்திர போஸ் சொன்னது…

விட்டுப் போன வரிகள்

ஒரு பக்கம் நான் பார்த்து
மறு பக்கம் நான் பார்க்க
ஒரு நாளும் போதாதம்மா
மணி முத்தம் வாய் சிந்த
சிறு வெட்கம் முகம் சொல்லும்
அது மட்டும் போதாதம்மா
என் கேள்வி
சுகம் என்று உன்னைக் கேட்பது
நான் சொல்வேன்,
சொன்னாலும் புரியாதது.

Unknown சொன்னது…

நன்றி சார்...

கருத்துரையிடுக