பின்பற்றுபவர்கள்

சனி, 23 ஆகஸ்ட், 2014

வஞ்சிக் கொடி நெஞ்சப் படி vanji kodi nenja padi

மறந்துப் போன ஒரு பாடல். வாணி ஜெயராமின் கம்பீரமான குரலுக்கு ஜெயச்சந்திரன் ஈடு கொடுக்க முடியவில்லை என்பது போல தெரிகிறது. ஆனாலும் சுகமான பாடல். இளமை விருந்து.

திரைப் படம்: சாந்தி முகூர்த்தம் (1984)
நடிப்பு:  ஊர்வசி, மோகன்
இயக்கம்: ஸ்ரீபிரியா, தயாரிப்பு: அவரது அம்மா கிரிஜா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல்: வைரமுத்துவாக இருக்கலாம்.














வஞ்சிக் கொடி நெஞ்சப் படி
அன்பின் ரசம் அள்ளிக் குடி
ஏதேதோ செய்கின்றதே

மங்கை இதழ் தங்கச் சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத் தமிழ்
பூமாரி பொழிகின்றதே

பொல்லாத நாணம் போ என்றது

இது போதுமென்று யார் சொன்னது
வஞ்சிக் கொடி நெஞ்சப் படி
அன்பின் ரசம் அள்ளிக் குடி
ஏதேதோ செய்கின்றதே

மங்கை இதழ் தங்கச் சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத் தமிழ்
பூமாரி பொழிகின்றதே

பொல்லாத நாணம் போ என்றது

இது போதுமென்று யார் சொன்னது

உள்ளங்கைத் தேனே உன் மேனிதானே
நான் தீண்டும் புல்லாங்குழல்

நீ தீண்டக் கண்டு சந்தோஷம் கொண்டு
பூப் பூக்கும் புல்லாங்குழல்

கொடுத்தாலும் குறையாது

எடுத்தாலும் குறையாது

கொடுத்தாலும் குறையாது

எடுத்தாலும் குறையாது

இளம் பூவின் முத்தம் இதமான யுத்தம்

வஞ்சிக் கொடி நெஞ்சப் படி
அன்பின் ரசம் அள்ளிக் குடி
ஏதேதோ செய்கின்றதே

மங்கை இதழ் தங்கச் சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத் தமிழ்
பூமாரி பொழிகின்றதே

பொல்லாத நாணம் போ என்றது

இது போதுமென்று யார் சொன்னது

என் தேகம் யாவும் ஏன் இந்த ஈரம்
நீ என்ன கார்க்காலமா

பனிப் பெய்யும் போதே நனைகின்ற மாதே
மழை பெய்தால் குளிர் தாங்குமா

மழையொன்றும் தடையல்ல

மகரந்தம் சுமையல்ல

மழையொன்றும் தடையல்ல

மகரந்தம் சுமையல்ல

உன் ஆண்மை எந்தன் உயிர் சேர அல்ல

வஞ்சிக் கொடி நெஞ்சப் படி
அன்பின் ரசம் அள்ளிக் குடி
ஏதேதோ செய்கின்றதே

மங்கை இதழ் தங்கச் சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத் தமிழ்
பூமாரி பொழிகின்றதே

பொல்லாத நாணம் போ என்றது

இது போதுமென்று யார் சொன்னது
ல ல ல ல ல ல ல ல லலலலலல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக