பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

வானம் அருகிலொரு வானம் vaanam arugiloru vaanam

மிக சாதாரணமான, மெல்லிய பின்னணி இசையில் மௌன மொழி போல ஒரு பாடல். இனிய கானம்.
12 நாட்கள் ஆம்ஸ்டர்டாம், ப்ரூஸல் , பாரிஸ், ஸ்விஸ் சுற்றுப் பயணம் முடிந்து இன்று புறப்படுகிறோம். சந்தோஷமான பொழுதுகள். முழுவதும் மழை பெய்த கோடைக் காலம்.
வாழ்க வளமுடன்.


திரைப் படம்: நியாய தராசு (1989)
பாடியவர்: K J யேசுதாஸ்
இசை: ஷங்கர்-கணேஷ்
பாடல்: வாலி
நடிப்பு: நிழல்கள் ரவி, ராதா
இயக்கம்: K ராஜசேகர்












வானம்
அருகிலொரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம்
பறவைகளின் கானம்

வானம்
அருகிலொரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம்
பறவைகளின் கானம்

ஏழாண்டு காலம்
இவள் ஊர் பார்த்ததில்லை
கார் போகும் சாலை
இவள் கால் பார்த்ததில்லை
இன்றல்லவோ மண் பார்க்கிறாள்
இடைவேளையில் பண் கேட்கிறாள்
இமை ரெண்டும் ஆட மறந்து விட்டாள்
வெளியேறினாள்
கிளியாகினாள்

வானம்
அருகிலொரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம்
பறவைகளின் கானம்

பூலோகம் சுகமே
இந்த பொய் வாழ்க்கை சுகமே
பூந்தோட்டம் சுகமே
அட போராட்டம் சுகமே
இவள் காண்பது
புது தேசமா
இவள் கொண்டது
மறு ஜென்மமா
கடந்து சென்ற காலம் கை வருமா
கண்ணீரிலே
சந்தோஷமா

வானம்
அருகிலொரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம்
பறவைகளின் கானம்ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்  ம் ம் ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக