பின்பற்றுபவர்கள்

வியாழன், 6 ஜனவரி, 2011

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னா என்ன லாபம்...

 இந்தப் பாடல் காதல் தேவதை எங்கின்ற வெளி வராத படத்திலிருந்து ஒலிக்கின்றது.

பாடலைக் கேட்ட உடனேயே புரிந்து போகும் இதன் வரலாறு. ஆனால் இந்த பாடலிலும் இதன் மறு பதிப்பான அடுத்தப் பாடலிலும் கவிதை வரிகளின் முதிர்ச்சியில் நல்ல வித்தியாசம் தெரிகிறது. முதல் பாடலில் பல வரிகள் அர்த்தமே இல்லாமல் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவின் நல்ல இசை இந்த இடத்தில் வீணடிக்கப்பட்டுள்ளது.
முதல் பாடல் 1991 இல் வெளியானதாக குறிப்பு உள்ளது ஆனால் அடுத்த பாடல் 1987 எங்கிறார்கள். இது இளையராஜா இசையில் வந்தது அடுத்தது கங்கை அமரன் இசையில் வந்தது. ஒரே குழப்பம்தான். இளையராஜாவா கங்கை அமரன் இசையை மறுபதிவு செய்திருப்பார்?

நன்றி தமிழ் உதயம்.

எனது மற்றொரு நண்பர் சொல்கிறார். காதல் தேவதை 1991 இல் வெளியானது. அது தெலுங்கு படத்தின் மறுபதிப்பு. தெலுங்கு படத்தில் இந்த இசையை இளையராஜா பயன்படுத்தி உள்ளார். அதுவே தமிழில் மொழி மாற்றம் பண்ணும் போதும் பாடலாக வெளிவந்துள்ளது என்று.
நன்றி என் குழப்பம் தீர்ந்தது

இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து கேட்டு பாருங்கள்

திரைப்படம்: காதல் தேவதை (1971) (வெளிவராத படம் எங்கிறார்கள்)
இசை: இளையராஜா
மேற்கொண்டு எந்த விபரமும் தெரியவில்லை 

 

http://www.divshare.com/download/13699947


அடுத்த பாடல்

திரைப்படம்: எங்க ஊரு பாட்டுக் காரன் (1987)

இசையும் பாடல் வரிகளும்: கங்கை அமரன்
நடிப்பு: ராம ராஜன், நிஷாந்தி, ரேகா
பாடியவர்கள்: நாகூர் பாபு எங்கின்ற மனோ மற்றும் சித்ரா
http://www.divshare.com/download/13699486-af5நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னா என்ன லாபம்...


நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்...இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

ஊறும் பூந்தேனும் அமுதம்தான் வாடி பொன்வண்டும் நாடும் மொய்க்காத பாடி..

அடி ஆத்தி உண்டாகும் உள்காயம் நல்லா  புரிஞ்சாசி பொன்வண்டின் முன் மாயம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னா என்ன லாபம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்...இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

அங்கெங்கே நீ தொட மெல்ல நான் தொட மெல்ல கையை தட்டி..
கொஞ்சிதா சின்ன குட்டி வெள்ளியிலான வெத்தலைப் பெட்டி..
என்னை நீ தாலி கட்டி மத்தளம் கொட்டி போடனும்ன் மெட்டி..
மன்னனே  மெல்ல கட்டி அள்ளுற பொண்ணு வெல்லக் கட்டி..
சின்ன சின்ன தீபமிட்டு நானும் நல்ல மெத்தையிட்டு..
நெஞ்சும் நெஞ்சும் ஆசை பட்டு சேரும் சேரும் தூக்கம் கெட்டு...

மின்னும்  பொன்னா வந்து நின்னாச்சு கை பட்டதாலே கூச்சம் விட்டாச்சு..
வண்டத்தான் பூந்தோப்பு யம்மா தொட்டு முத்தாட சந்தோஷம் அம்மா..
அடி கை தொடவும் கண் படவும் பாட்டுச் சொன்ன மாமன் இதோ...

நமக்குள்..
ஏன் அன்பே அன்பே வாட்டம்...இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னா என்ன லாபம்...

பட்டு மேத்தை வாங்கி வச்சி பாலும் வச்சி பழமும் வச்சி...
பக்கம் இந்த பூவும் கொஞ்ச மெல்ல மெல்ல சூடும் இங்கே
நீயும் உன் வெட்கம் விட்டு தோளை தட்டி அழகாய் தொட்டு..
போதையில் சொல்லும் மெட்டு பருவக் கதை பேசுமடி..
சேலையொன்னு கட்டும் பெண்ணு ஏங்கும் இந்த கன்னிப் பெண்ணு..
ஆசையோடு ஒட்டிக் கட்டி யவனத்தை பாடுமடி..

உன்னை பாத்து வந்தேன் இங்கு மாமா நானும் கொஞ்சும்படி கண்டேன் இன்று மாமா
வச்சிக்க தண்ணியத்தா கூட தினம் கட்டிலிலே பொங்கி எங்கும் ஓட..
அதை நீ சொல்லவா நான் சொல்லவா ஆசை உன்னை அசத்திடுதோ..

நமக்குள்..
ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னால் என்ன லாபம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்...இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

ஊறும் பூந்தேனும் அமுதம்தான் வாடி பொன்வண்டும் நாடும் மொய்க்காத பாடி..

அடி ஆத்தி உண்டாகும் உள்காயம் நல்ல புது காட்சி பொன்வண்டின் முன் மாயம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

அடுத்த பாடல்


பச்சரசி மாவிடிச்சி மாவிடிச்சி சக்கரையில் பாவு வச்சி பாவு வச்சி..
சுக்கீடிச்சி  மிளகிடிச்சி மிளகிடிச்சி பக்குவமா கலந்து வச்சி கலந்து வச்சி..
அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும் காக்க வேணும் காக்க வேணும் தாயே
மதுர  மரிக் கொழுந்து வாசம்..என் ராசாத்தி உன்னுடைய நேசம்..
மதுர மரிக் கொழுந்து வாசம்..என் ராசாத்தி உன்னுடைய நேசம்..

மானோட பார்வை மீனோட சேரும்..மானோட பார்வை மீனோட சேரும்..

மாறாம என்னை தொட்டு பேசும்.. இது மறையாத என்னுடைய  பாசம்..
மதுர மரிக் கொழுந்து வாசம்..என் ராசாத்தி உன்னுடைய நேசம்..

பொட்டுனா பொட்டு வச்சி வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு.. பட்டுனு சேலைய கட்டி எட்டி வச்சி நடந்துகிட்டு..

பொட்டுனா பொட்டு வச்சி வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு.. பட்டுனு சேலைய கட்டி எட்டி வச்சி நடந்துகிட்டு..
கட்டுனா கட்டிபுட்டே நெஞ்சை கொஞ்சம் தட்டிபுட்டே..
வெட்டும் இரு கண்ணை வச்சி என்னை கட்டி போட்டுபுட்டே..

கட்டுரது உனக்கு மட்டும் தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா..
எப்போதோ விட்ட குறை மாமா அது இரவு சிறை கட்டுதையா தானா..
அது இப்போது வாட்டுதென்னை பாட்டு ஒன்னை அவிழ்த்துவிடு..
மதுரே
மரிக் கொழுந்து வாசம்..

என் ராசாவே உன்னுடைய நேசம்..
அடி மதுரே
மரிக் கொழுந்து வாசம்..

என் ராசாவே உன்னுடைய நேசம்..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
தந்த தனனா...தந்த தனனா...தந்த தனனா...தந்த தனனா...
மெட்டுனா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு..
கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிபுட்டு
மெட்டுனா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு..
கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிபுட்டு
சுத்தினா சுத்தி அதைஎன் கழுத்தில் போட்டுபிட்டே
ஒன்னை மட்டும் விட்டு பிட்டேன்..
தாலி கட்ட மறந்துபுட்டேன்..
நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் ஒன்னை பாடும் ஒன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ தெரிஞ்சதடி சிறகடிச்சி பறக்குதடி..

மதுரே
மரிக் கொழுந்து வாசம்..

என் ராசாத்தி உன்னுடைய நேசம்..

மானோட பார்வை மீனோட சேரும்..
மானோட பார்வை மீனோட சேரும்..
மாறாம என்னை தொட்டு பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
மதுரே
மரிக் கொழுந்து வாசம்..

என் ராசாத்தி உன்னுடைய நேசம்..
மதுரே
மரிக் கொழுந்து வாசம்..
என் ராசாவே உன்னுடைய நேசம்....

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

காதல் தேவதை 1991ல் வந்தது. ஸ்ரீதேவி, சிரஞ்சிவி நடித்தது. இந்த படத்தைபார்த்துள்ளேன்

கருத்துரையிடுக