பின்பற்றுபவர்கள்

புதன், 13 மார்ச், 2013

மெல்ல வரும் காற்று

தமிழ் திரைப் படத் துறையை மெல்லிசை மன்னர் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் அவரது இசையில் ஒரு மெல்லிய பாடல். அதிலும் சுசீலா அம்மாவின் குரல் அபாரம். இன்றே வா என்பதிலும், இன்றே தா என்பதிலும் அவர் ஒரு vibration உடன் முடிப்பார். அவரது பல பாடல்களில் இதை பார்த்திருக்கிறேன். மீண்டும் அந்த பாடலை அவரால் மட்டுமே பாடமுடியும் என்ற ஒரு நிலை அதில் தெரியும்.

திரைப் படம்: கலாட்டா கல்யாணம் (1968)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: C V ராஜேந்திரன்
நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதா

http://asoktamil.opendrive.com/files/Nl84NTUwMjgzX0dHMnV0XzgxNjY/mella%20varum%20katru.mp3


மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து

ஆணிப்பொன் மேனியை
ஆசையில் அணைத்திட
காணிக்கை கொடுத்ததும்
நேற்றல்லவோ
பனிமலர் அழகினில்
மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண் என்ற மொழி பார்த்து
பெண் என்ற சுதி சேர்த்து

தலைவன் தலைவி
விழியால் மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே
தழுவாதிருந்தால் ஊடல்
அவனும் அவளும்
சிலையாய் இருந்தால் கோயில்
இதயம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல்

காதலன் பேசிட மாதுளம் பூவினில்
தேன் துளி கொடுத்ததும்
நீயல்லவோ
உனக்குள்ள மயக்கத்தில்
எனக்குள்ள பாக்கியைத்
தந்தால் இன்றே தா

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து

மலர்ந்தாள் கனிந்தாள்
மடி மேல் விழுந்தாள் பாவை
மெதுவாய் படரும்
கொடி போல் வளைந்தாள் தோகை
யாருமில்லாதொரு நேரத்திலே
உன்னை வாவென அழைத்ததும்
நானல்லவோ
நாளென்ன பொழுதென்ன
ஆரம்பப் பாடத்தை
சொன்னால் இன்றே சொல்மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
ல ல ல ல லாஅ ல லலல லலலா

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டிராத பாடல்.... நன்றி...

தென்றல்...!

NAGARAJAN சொன்னது…

CV ராஜேந்திரன் இயக்கிய முதல் படம் (இயக்குனர் ஸ்ரீதரிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர்).


1965 போர் நிவாரண நிதிக்காக நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் திரை வடிவம்தான் இப்படம்.

கருத்துரையிடுக